இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/27/2013

கடத்தலா? காதலா? விருந்துக்கு வந்த புதுப்பெண் 15 பவுன் நகையுடன் மாயம்

• •
விருந்துக்கு வந்த புதுப்பெண் மாயமானார். நகைக்காக கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட் டம், உசிலம்பட்டி அருகே பாஸ்கரன்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் சவுமியா (22). இவருக¢கும், அதே பகுதியைச் சேர்ந்த சுளிஒச்சான்பட்டியை சேர்ந்த ஒச்சுகாளை மகன் சுரேந்திரன் (25) என்பவருக¢கும் கடந்த 11 நாட்களுககு முன் திருமணம் நடைபெற்றது. இவரது சித்தப்பா சுந்தரதேவன் நிலககோட்டை அருகே அணைப்பட்டியில் வசித்து வருகிறார்.திருமணத்திற்கு பின் மணமக்களை சுந்தரதேவன் விருந்துக¢காக அணைப் பட்டி அழைத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டபோது வீட்டின் அருகிலிருந்த குளியல் அறைக்கு சவுமியா குளிக்கச் சென் றார். நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் குளியலறையில் பார்த்தபோது அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுந்தரதேவன் கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சவுமியா கழுத் தில் 15 பவுன் தங்க நகை அணிந்திருந்தார். நகைக¢காக கடத்தப்பட்டாரா? அல்லது வேறு பிரச்னை காரணமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா