TN:எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள லக்ஸர் நகரத்தின் அருகே வெப்ப காற்று பலூன் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 19 சுற்றுலா பயணிகள் பலியாகியுள்ளனர். இவர்களில் 9 ஹொங்கொங் நாட்டவர் இருப்பதாகவும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்களும் உள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நைல் நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள லக்ஸர் நகரமானது சிதைந்து போன புராதன எகிப்து அரசர்கள் வாழ்ந்த இடமாகும். இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் இந்த பலூன் பறந்த போது எரிவாயு வெடித்துள்ளது. இதில் பயணித்த 20 பேரில் 19 பேர் மரணமடைந்தனர். ஒரு பயணியும் பலூனை இயக்கிய நபரும் தப்பித்தனர்.
எகிப்தில் புராதன சின்னங் களை பார்வையிட சுற்றுலா பயணிகள் வெப்பக் காற்று. பலூன்களை பயன் படுத்துவது வழமையானதாகும். இந் நிலையில் என் பி. சி. தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் மேற்படி விபத்தில் கொல்லப் பட்டோர்களில் 9 பேர் ஹொங்கொங் நாட்டவர்கள் என்றும் நான்கு ஜப்பான், இரு பிரிட்டன் மற்றும் இரு பிரான்ஸ் நாட்டவர்கள் அடங்குவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

0 comments:
Post a Comment