இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/28/2013

தாய், தந்தை, குழந்தை சடலமாக மீட்பு

• •

AD :பாணந்துறை - சாகர மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 8 மாத குழந்தை ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இன்று (28) காலை குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். 

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவரை அடுத்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

பொலிஸார் குறித்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஆண் தூக்கிட்ட நிலையிலும் பெண் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் இறந்தும் குழந்தை மெத்தையில் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இது குறித்து பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா