இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/04/2013

ஷாருக்கான் மீது நடிகர் மனோஜ் குமார் வழக்கு

• •
ஃபரா கான் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஓம் சாந்தி ஓம்’ ஷாருக்கான் தயாரித்து கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பழம் பெரும் நடிகர் மனோஜ் குமார் பற்றி பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன

இந்த காட்சிகளை நீக்க கோரி மனோஜ் குமார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்றம், மனோஜ் குமார் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை நீக்க உத்தரவிட்டது. 

இதற்கிடையே அதே ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தை ஷாருக்கான் தற்போது ஜப்பானில் ரிலீஸ் செய்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் சேர்த்து அந்த படத்தை ரிலீஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால் மனோஜ் குமார், நேற்று முன்தினம் அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில் ஷாருக்கான் மற்றும் இரோஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்துக்கு எதிராக 100 கோடி கேட்டு மனுவை தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 6 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
Bas TN

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா