இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/05/2013

சவூதியில் புதிய தொழிலாளர் சட்டத்தால் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

• •
சவூதி அரேபியாவின் புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக அங்குள்ள பல பாடசாலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு கடத்தப்படும் அபாயம் இருப்பதால் பல ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பதை தவிர்த்து வருவதால் சிறுவர்கள் கல்விகற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் பிரதான நகரங்களான ரியாத் மற்றும் ஜித்தாவில் இருக்கும் தனியார் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். வெளிநாட்டு தொழிலாளர்களை குறைக்கும் வகையில் சவூதியின் தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதில் சவூதியில் உள்ள பல பாடசாலைகளிலும் வெளிநாட்டு ஆசிரியர்களே கற்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டு பணியாளர்கள் கைது செய்யப்படும் சூழல் இருப்பதால் பல ஆசிரியர்களும் பணிக்கு திரும்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதே காரணத்திற்காக பல சிறு வியாபாரத் தளங்களும் பல தினங்கள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவான சவூதி நாட்டவர்களை பணியில் அமர்த்தியதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும்.

அதேபோன்று புதிய சட்டத்தின்படி வெளிநாட்டு தொழிலாளர்களை அனைவரும் பணியில் அமர்த்த முடியாது. அவர்களுக்கு அனுசரணை வழங்குவோர் மாத்திரமே பணியில் அமர்த்த முடியும் என நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டு ஆசிரியர்கள் ஒரு பாடசாலைக்கு மேல் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய சட்டம் இவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய தொழிலாளர் சட்டத்தால் சவூதி நகரங்களில் உள்ள 60 க்கும் அதிகமான சர்வதேச பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதோடு இதனால் 40,000க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா