இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/26/2013

இஸ்லாமிய பெண் ஒருவருக்கு பர்தாவை அகற்ற ஒண்டோரியோ நீதிபதி உத்தரவு

• •
நீதிமன்ற விசாரணையின் போது முகத்தை மூடியிருக்கும் பர்தாவை கட்டாயம் அகற்ற வேண்டும் என இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஒண்டோரியோ நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ஒண்டோரியோவில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர், தன்னை இரண்டு ஆண்கள் ஐந்து வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முகத்தை மூடியபடி பர்தா அணிந்திருந்தார். குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பாதிக்கப்பட்டதாக வழக்கு தொடுத்திருக்கும் பெண், தன்னுடைய பர்தாவை நீக்கினால் மட்டுமே தான் மேற்கொண்டு வாதாட முடியும் என வாதிட்டார். ஒருவரை விசாரணை செய்யும்போது அவருடைய முகத்தை கூர்ந்து நோக்கினால்தான், அவர் கூறும் உண்மைத்தன்மையை அறிய முடியும். எனவே வழக்கு விசாரணையில் முகபாவத்தை அறிய வசதியாக அந்த பெண், விசாரணையின்போது, பர்தாவை நீக்க அனுமதிக்க வேண்டும் என வாதாடினார்.
வழக்கறிஞரின் நியாயமான வாதத்தை ஏற்றுக்கொண்ட ஒண்டோரியோ நீதிமன்ற நீதிபதி, விசாரணையின் போது கட்டாயம் முகத்தை மூடியிருக்கும் பர்தாவை நீக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா