இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/23/2013

இலங்கை முஸ்லிம் இளைஞர் சமூகமே இது உங்கள் கவனத்திற்கு.!


SAFRAN BIN SALEEM
இலங்கையை பொறுத்தவத்த வரை அல்லாஹ்வின் கிருபையால் இன்று நிதி, நீதி, நிர்வாக, கல்வி உட்பட பல்வேறு பட்ட அரச உயர் பதவிகளில் எமது முஸ்லிம் கல்விமான்கள் அமைச்சு, அரச திணைக்களங்கள், சபைகள் உட்பட பல நிறுவனங்களில்  பதவி வகிக்கின்றனர் . ஆனால் அவர்கள் குறித்த காலத்தக்குப் பின் ஓய்வு பெற்று செல்ல உள்ளனர். அவர்களின் ஓய்வுக்கு பின் அந்த இடை வெளியினை நிரப்ப இன்றைய இளைஞர் சமூகமான நாம் தயார் நிலையில் உள்ளோமா என்பது வினாக்குறியாகவே உள்ளது.

இளைஞர் சமூகம் இத்துறைகளில் காட்டுகின்ற ஆர்வம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது வெளிப்படையே ஆகும். இதற்கு எடுத்து காட்டாக அண்மைக்காலங்களில் நடை பெற்ற இலங்கை அரச நிர்வாக சேவைக்கு(SLAS) தேர்ந்து எடுப்பதற்காக நடை பெறும் பரீட்சை பெறு பேறுகள் காணப்படுகின்றன. இப் பரீட்சைகளில் தெரிவாகும் முஸ்லிம்களின் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது. 

எனவே எமது முன்னோர் எமக்கு பெற்றுத் தந்த உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், எதிர் காலத்தில் எமது இருப்பை உறுதி செய்வதற்கும் அரச உயர் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எனவே இளைஞர் சமூகமே எமது எதிர் காலத்தை பற்றி சிந்திப்போம், எமது சமுதாயத்தின் எதிர் காலத்தை பற்றி சிந்திப்போம்.  எம் சமூகத்துக்கும், எமது நாட்டுக்கும் விசுவாசத்துடன் எம்மாலான சேவைகளை செய்வோவோம் என திட சங்கற்பம் பூணுவோம்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா