பாகிஸ்தானில் அம்மை நோய் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் உயிரிழந்தோர் பற்றிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாகிஸ்தானின் 70 நகரங்களில் அம்மை நோய் காரணமாக சுமார் 14 ஆயிரத்து 300 பேர் பாதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 120 க்கும் மேற்பட்டவை சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான அச்சம் நிலவுவதாக பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 30 மில்லியன் நோய்த் தடுப்பூசிக்கான தேவை உள்ள பாகிஸ்தானின் புன்ஜாப் மாகாணத்தில் தற்போது 7 மில்லியனே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment