இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/07/2013

அசாத் சாலிக்கு மரண தண்டனை வழங்குமாறு BBS கோரிக்கை

தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலிக்கு இஸ்லாமிய ஷரீஆ சட்டப்படி மரண தண்டனை வழங்குமாறு பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் டிலந்த விதானகே  தெரிவித்தார்.  கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டம் நடைபெறுவது குறித்து டிலந்த விதானகேயை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது; 

பொதுபல சேனாவின் செயற்பாடுகள் குறித்தும், அண்மைக்கால அரசியல் ரீதியான விடயங்களிலும் பொய்களைக் கூறி அரசியல் இலாபம்பெற முயற்சிக்கிறார். பொதுபல சேனாவின் கூட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக பொய்களைப் பரப்பி வருகிறார்.

இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின்படி பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் பொருத்தமில்லாத மிகப்பெரிய குற்றமாகும். அவர் தனது சமுதாய மக்களையே பொய்களைக்கூறி ஏமாற்றிப் பிழைக்கிறார்.  அடிக்கடி பொய்களைக்கூறி மக்களை ஏமாற்றப்போய் சட்டத்தின் பிடியில் சிக்கி ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலையானார்.

இப்போது மீண்டும் பழைய பல்லவியைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அவரால் முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது. முஸ்லிம்களே அவருக்கு ஷரீஆ சட்டப்படி மரண தண்டனை வழங்கவேண்டும்.  அசாத் சாலி கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் கல்வி கற்கும் காலங்களில் பள்ளித் தோழராக இருந்தார். அப்போதும் அவருக்கு பொய் கூறும் பழக்கம் இருந்தது. இப்போதும் அவர் அதைத்தான் செய்துவருகிறார். அதற்காக நான் கவலைப்படுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Bas NI

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா