மெசேஜிங் மற்றும் அழைப்பு வசதியை வழங்கும் வைபர் அப்ளிகேசனை சவுதி அரேபியா தடைசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டல்மொன் மார்கோ தெரிவித்துள்ளார். எனினும் இத்தடைக்கான காரணம் தொடர்பில் தாம் தெளிவுபடுத்தப்படவில்லையென மார்கோ தெரிவித்துள்ளார்.
வைபர் உட்பட மெசேஜிங் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் தமது தகவல்களை கண்காணிப்பதற்கு அனுமதிக்கவேண்டுமெனவும், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவற்றின் மீது தடை விதிக்கப்படுமென சவுதி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தது. எனினும் வைபர் இதற்கு இணங்கவில்லையென டல்மொன் மார்கோ குறிப்பிடுகின்றார் .
இதன் காரணமாகவே சவுதியில் வைபர் தடை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதேபோன்ற காரணத்தை முன்வைத்தே சவுதி அரசாங்கம் பிளக்பெரி மெசெஞ்சர் சேவையை 2010 ஆம் ஆண்டு தடைசெய்யபோவதாக எச்சரித்திருந்ததுடன் அதன் சேர்வர்களை உள்நாட்டிலும் அமைக்கும் படி தெரிவித்திருந்தது.
இதனூடக இலகுவாக அதனை கண்காணிக்க முடியுமென சவுதி எண்ணியிருந்தது. ஆனாலும் தற்போது வைபர் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Bas Vi
மெசேஜிங்
மற்றும் அழைப்பு வசதியை வழங்கும் வைபர் அப்ளிகேசனை சவுதி அரேபியா
தடைசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டல்மொன் மார்கோ தெரிவித்துள்ளார்.
எனினும் இத்தடைக்கான காரணம் தொடர்பில் தாம் தெளிவுபடுத்தப்படவில்லையென மார்கோ தெரிவித்துள்ளார்.
வைபர்
உட்பட மெசேஜிங் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் தமது தகவல்களை
கண்காணிப்பதற்கு அனுமதிக்கவேண்டுமெனவும், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில்
அவற்றின் மீது தடை விதிக்கப்படுமென சவுதி அரசு கடந்த சில மாதங்களுக்கு
முன்னர் எச்சரித்திருந்தது.
எனினும் வைபர் இதற்கு இணங்கவில்லையென டல்மொன் மார்கோ குறிப்பிடுகின்றார் .
இதன் காரணமாகவே சவுதியில் வைபர் தடை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்
சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற காரணத்தை முன்வைத்தே சவுதி
அரசாங்கம் பிளக்பெரி மெசெஞ்சர் சேவையை 2010 ஆம் ஆண்டு தடைசெய்யபோவதாக
எச்சரித்திருந்ததுடன் அதன் சேர்வர்களை உள்நாட்டிலும் அமைக்கும் படி
தெரிவித்திருந்தது. இதனூடக இலகுவாக அதனை கண்காணிக்க முடியுமென சவுதி
எண்ணியிருந்தது.
ஆனாலும் தற்போது வைபர் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.VK
- See more at: http://www.importmirror.com/2013/06/blog-post_7820.html#sthash.VmEUOl2G.dpuf
0 comments:
Post a Comment