குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. தேர்தல் பிரசாரக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பா.ஜ.க.வில் வகித்து வந்த பொறுப்புகளை அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இன்று இராஜினாமா செய்தார்.
அவரது இராஜினாமா பா.ஜ.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கய்யா நாயுடு, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அத்வானியின் இராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று அவரிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்தநிலையில், அத்வானியின் இராஜினாமாவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என டுவிட்டரில் கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங் கூறினார்.
இதேவேளை, இராஜினாமா முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அத்வானியை வற்புறுத்த உள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், சுஷ்மா சுவராஜ் ஒருவரால் மட்டும்தான் அத்வானியை சமரசப்படுத்த முடியும் என்று கருதுகிறேன் என உமாபாரதி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment