இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/10/2013

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அறிக்கையை கோருகிறார் ஜனாதிபதி



கடந்த நாட்களாக நிலவும் சீரற்ற வானிலைக்கு முகங்கொடுப்பது தொடர்பில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனஞ் செலுத்தியுள்ளார்.


சீரற்ற வானிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்திற்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியினால் இவ் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக வானிலை தொடர்பாக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கேட்டபோது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா