கல்முனை மாநகர சபையில் அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 112 ஊழியர்கள் இன்று புதன்கிழமை (05) தொடக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் மாநகர சபை முன்றலில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி இன்று கடமை செய்ய வேண்டாம் என மாநகர சபை அதிகாரிகளால் இவர்கள் தடுக்கப்பட்டதுடன் கையொப்பமிடவும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்தே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கல்முனை மாநகர சபை வளாகத்தில் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment