இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/06/2013

சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை: ஷில்பா ஷெட்டியின் கணவர் ஒப்புதல்


(தினகரன் இந்தியா) ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் மீது பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா விசாரணையில் ஒப்புக் கொண்டதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து தில்லி போலீஸ் விசாரித்து வருகிறது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட பிறகு, குந்த்ராவின் பாஸ்போர்ட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக் காலத்தின்போது அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி போலீஸ் ஆணையர் நீரஜ் குமார் கூறுகையில், "சூதாட்டத் தரகர் கோயங்கா என்பவர் மூலம் ராஜஸ்தான் அணியின் மீது பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குந்த்ரா ஒப்புக் கொண்டார். சூதாட்டத்தின் மூலம் நிறைய பணத்தை அவர் இழந்ததும் தெரிய வந்தது' என்று தெரிவித்தார்.
விசாரணை குறித்து போலீஸ் சிறப்பு பிரிவு ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "குந்த்ராவுக்காக நான் சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்று கோயங்கா நீதிபதி முன் சாட்சியம் அளித்துள்ளார். அப்போது, ஷில்பா ஒரே ஒருமுறை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். சூதாட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ. 1 கோடியை குந்த்ரா இழந்துள்ளார்' என்று அவர் தெரிவித்தார்.
கோயங்காவின் சாட்சியத்தைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, குந்த்ராவிடம் போலீஸார் புதன்கிழமை 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
சூதாட்டம் தொடர்பான பிரச்னையில் சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனைத் தொடர்ந்து, குந்த்ரா தற்போது சிக்கியுள்ளார்.

நான் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை. முறைப்படியான அறிக்கையை விரைவில் வெளியிடுவேன். அமைதியாக இருப்பதால் நான் தவறு செய்துவிட்டதாக முடிவு செய்து விட வேண்டாம். உண்மை வெல்லும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா