ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தின் பதவி காலம் முடிவதால், நேற்று, அதிபர் தேர்தல் நடந்தது. அதில், ரோவ்ஹானி, தெக்ரான் மேயர் முகமது பகர் குவாலிபாப், முகமது ஜலிலி உள்பட 6 பேர் போட்டியிட்டனர்.
ஈரான் தலைவர், அயதுல்லா அலி கொமெனியின் ஆதரவு பெற்ற நபர்கள் மட்டுமே, அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரானில், 89 முதல், 97ம் ஆண்டு வரை, மிதவாத போக்குடைய ரப்சஞ்சானி, அதிபராக இருந்தார். இவர் அமெரிக்காவின் ஆதரவு பெற்றவர் என்ற காரணத்தால், இந்த தேர்தலில், அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
நேற்றைய தேர்தலில், 5 கோடி மக்கள் ஓட்டளித்தனர். தேர்தல் முடிந்ததும், ஓட்டுக்கள் எண்ணுவது துவங்கி விட்டது.
தெக்ரான் மற்றும் சில நகரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. எனவே, அங்கு வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஹசன் ரோவ்ஹானி
அதே போன்று, வெளி நாடுகளில் வாழும் ஈரானியர்களின் வாக்குகள், நாடோடிகள் உள்ளிட்டோர் பதிவு செய்த ஓட்டு எண்ணிக்கையும் தாமதமாக நடந்தது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஹசன் ரோவ்ஹானி முன்னணியில் இருந்தார். 8 லட்சத்து 61 ஆயிரத்து 866 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இவர் 4 லட்சத்து ஒரு ஆயிரம் ஓட்டுகள் பெற்று இருந்தார். இதன் மூலம் அவர் 46.6 சதவீதம் வாக்குகள் பெற்று இருந்தார்.
இவருக்கு அடுத்த படியாக குவாலிபாப் 14.6 சதவீதம் அதாவது 1 லட்சத்து 27 ஆயிரம் வாக்குகளும், முகமது ஜலிலி 1 லட்சத்து 19 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இவர்கள் தவிர மற்ற 3 வேட்பாளர்களும் மிக குறைந்த ஓட்டுகளே பெற்றுள்ளனர்.
இந்த தகவலை ஈரான் உள்துறை மந்திரி முஸ்தபா மொகமது நள்ளார் தெரிவித்தார். தற்போது முன்னிலை பெற்றுள்ள ஹசன் ரோவ் ஹானி ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். பழமை வாதிகள் நிறைந்த ஈரானில் சில சமூக சீர்திருத்தங்கள் கொண்டு வர பாடுபட்டு வருகிறார். அணு ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ளார்.
0 comments:
Post a Comment