(ஹனீபா)
சம்மாந்தறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மலையடிக் கிராமம் -02 கிராம அபிவிருத்திச் சங்ககத்தின் எற்பாட்டில் சங்கத்தினால் செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகளை பள்ளிவாசல் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பகிர்ந்தளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று (18) சம்மாந்துறைப் பிரதேச செயலாளரின் உத்தியோக பூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.
மலையடிக் கிராமம் -02 கிராம அபிவிருத்திச் சங்ககத்தின் தலைவர் சமூக சேவையாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்த கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.சரீப் முஹம்மட், பதவி நிலை உத்தியோகத்தர் ஏ.ஏ.றஹீம் உட்பட பள்ளிவாசல் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment