இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/17/2013

மட்டக்களப்பு போதனாசிரியர் தாக்கப்பட்டார்.


ஆசாத் : மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையில் பணிபுரியும் (CNC Instructor) போதனாசிரியரான எம். சரீப் வயது 33 என்பவர், அம்பாரை மாவட்டத்தின் உதவிக் கணக்காளரான கே.எம்.சிறாஜ் என்பவரால் தலையில் பலமாக தாக்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ள்ளார்.

கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் உள்ள தனிக்கை குளுவிற்கு (Audit Team ​) மட்டககளப்பு மாவட்டத்தின் தொழிற் பயிற்சி அதிகார சபையில் நடைபெறும் ஊழல்களை சரீப் தான் வழங்கிவருவதாகச் சொல்லி இருவருக்கும் இடையே ஏற்ப்பட்ட தர்க்கமே காறணமாகும்.

சென்ற வாரம் கொழும்பு தலைமைக் காரியாலயத்தின் தனிக்கை குளுவிற்கு  (Audit Team ​)  கிடைத்த இரகசிய தகவலையடுத்து (நிதி மோசடி) ஒரு குளு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் தாக்குதலை மேற்கொண்ட நபர் தாக்கியதன் பின்னர் தலை மறைவாகியுள்ளர். மேலும் இது சம்பந்தமாக ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் (கே.எம்.சிறாஜ்) என்பவர் நிந்தவூரை பிறப்பிடமாக கொண்டவர் . இவர் இதற்கு முன்னர் அம்பாரை மாவட்டத்தில் கடமை புரிந்த போது ஏற்ப்பட்ட தவறிற்காக தண்டனையின் நிமிர்த்தம் ( punishment   transfer )மட்டக்கிளப்பிற் மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 06 மாதங்களுக் முன்னரும் அம்பாரை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் ஒருவர் போதனாசிரியரால் தாக்கப்பட்ட சம்பவமும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவம் அம்பாரை மட்டககளப்பு தொழிற் பயிற்சி நிலையங்களில் இடம்பெறுவது உடனடியாக கைவிடப்பட வெண்டும்.
(செய்திக்கு பொறுப்பு செய்தி அனுப்பியவேறே)

இப்டிக்கு,

பயிற்சி பெறும் மாணவர்கள்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா