இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/08/2013

கல்முனையில் பெருநாள் திடல் தொழுகை


(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலின் நோன்பு பெருநாள் தொழுகை இன்று (08.08.2013) காலை 6.30 மணிக்கு கடற்கரை அருகாமையில் அமைந்துள்ள ஹூதா திடலில் நடைபெற்றது.
கின்னியா பிரதேசத்தில் சவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டது என்பதனை கின்னியா  ஜம்இய்யதுல் உலமா மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் கூடி ஊர்ஜிதப்படுத்திய பின்னர் பொது மக்களுக்கு விடுக்கப்ட்ட ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் அறிவித்தலுக்கு அமைவாக மேற்படி பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது.​

அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ்செய்க் ஏ.எல்.எம்.ஸபீர் கபூரியினால் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டு குத்பா பிரசங்கம் செய்யப்பட்டது.

குத்பா பிரசங்க உரையின்போது. “அன்புக்குரிய சகோதரர்களே, தாய்மார்களே, சகோதரிகளே அதே கின்னியாவில் இருந்துதான் தகவல் வந்தது நோன்பிற்குரிய பிறை தென்பட்டுவிட்டது என்று. ஏன் கின்னியாவில் இருந்து வந்த பிறையினுடைய கணக்கை நாங்கள் நிலை நிறுத்தக்கூடாது. கின்னியாவிலே தௌஹீத் வாதிகள் மட்டும் தான் இந்த பெருநாளை கொண்டாடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது. அங்கே இருக்கக் கூடிய எங்களுடைய ஏனைய சகோதரர்கள் அனைவரும் ஒன்றினணந்து இந்த பெருநாளை கொண்டாடுகிறார்கள்.

கிட்டத்தட்ட கின்னியா பிரதேசத்திலே காணப்படுகின்ற 97 பள்ளிவாசல்களும் ஒன்றினைந்து இந்த பெருநாளை கொண்டாடுகிறது. 97 பள்ளிவாசல்களும் ஒன்றினைந்து அங்கே பிறை தென்பட்டது என்பதை முழுமையாக ஊர்ஜிதம் செய்த பின்னால் அங்கே இருக்கின்ற உலமா சபைகள் ஒன்றினணந்து அவர்கள் அனைவரும் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.​

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கின்னியா கிளை பெக்ஸ் மூலமாக தங்களது லெட்டர்ஹெடில் சகல இடங்களுக்கும் அனுப்பி அறிவித்துள்ளார்கள். நிச்சயமாக நாங்கள் இந்த பிறை தென்பட்டது என்பதை நம்பிக்கையாக ஊர்ஜிதமாக ஏற்றுக் கொண்டு பெருநாளை கொண்டாடுகின்றோம் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கின்னியா கிளை  எங்களுக்கு ஊர்ஜிதமாக அனுப்பிவைத்துள்ளார்கள்.

அன்பார்ந்த சகோதரர்களே எங்களுக்கு நோன்பின் மீது கோபமா?, எங்களுக்கு இந்த மார்க்கத்தின் மீது கோபமா?, அல்லது எங்களது சகோதர ஜம்இய்யதுல் உலமா மீது கோபமா?, யார் மீதும் எங்களுக்கு கோபம் இல்லை. இந்த இடத்திலே நாங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை கூறிவிட்டார்கள் என்றால் நாங்கள் அதனை அப்படியே கடைப்பிடுத்து ஒழுகுவோம் என்று வாழக்கூடியவன் தான் ஒரு ஏகத்துவ வாதி என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் சகோதரர்களே. அதற்காக வேண்டித்தான் இந்த இடத்திலே உங்களுக்கு சொல்லுகின்றேன். நபி (ஸல்) அவர்களால் சொல்லப்பட்ட பொன் மொழிகளுக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் நாங்கள் இடம் கொடுக்க  கூடாது.

இந்தபெருநாளை அடுத்த நாள் கொண்டாடுவதில் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால் ஊர்ஜிதமான முறையிலே கின்னியாவில் இருந்து தகவல் வரும்போது ஏன் நிராக்கரிப்பு. ஏன் சகோதரர்களே?. நபி (ஸல்) அவர்களுடைய பொன் மொழிகள் இந்த உலகத்திலே நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதிலே நாங்கள் ஒவ்வொருவரும் தெட்டத் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும் சகோதரர்களே. நாங்கள் 29 நோன்புகளை நோற்றுவிட்டு பெருநாளை கொண்டாடுகின்றோம். 29 நோன்பு பிடித்த எங்களுக்கு இன்னும் ஒரு நோன்பு பிடிப்பது கஷ்டமா?.  நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள், நீங்கள் பிறையை பாருங்கள் பிறை தெரியவில்லை என்றால் 30 நோன்பையும் நோற்றுவிட்டு பெருநாள் கொண்டாடுங்கள் என்று. 10க்கும் 15க்கும் அதிகமான சகோதரர்கள் நம்பிக்கை அடிப்படையிலே  ஊர்ஜிதம் செய்தவர்களை ஏற்று ஏன் நாங்கள் நபி உடைய இந்த சுன்னாவை நிலைநிறுத்தக் கூடாது. நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவுக்கு எதிராக யார் முயற்சித்தாலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை இந்த இடத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா