இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/26/2013

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் மின்குமிழ்கள் பொறுத்த நடவடிக்கை


(அகமட் எஸ். முகைடீன்)
சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புறத்தில் வெளிச்சம் கூடிய போகஸ் லைட்களை நாளை மறுதினம் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று (26.10.2013) பணிப்புரை விடுத்தார்.

குறித்த பிரதேசத்தின் பின்புற வயல் வெளி வழியாக அண்மைக்காலமாக இரவு நேரங்களில் யானைகள் வருவதனாலும் அப்பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்படுவதனாலும் பிரதேச மக்கள் பீதியுடன் வசிப்பதாக முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து அபப்பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபோதே மேற்குறித்த பணிப்புரையை விடுத்தார்.

இதன்போது பிரதேச ஆண்கள் பெண்கள் என பலர் முதல்வர் சிராசை புடை சூழ்ந்து கல்முனை மாநகர சபை முதல்வர் விவகாரம் தொடர்பாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 

மாநகர சபை தேர்தலின்போது பெண்களாகிய நாங்கள் மிகவும் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாகவும் உங்களை மேயராக ஆக்கவேண்டும் என்ற கனவுடன் வாக்களித்தோம். அந்த கனவு நனவாகியுள்ளவேளையில் கானலாக மறைவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. அதுமாத்திரமல்லாது எங்களுக்கு நீங்கள் மேயரானதும் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வருகின்றீர்கள், உங்களை இளக்க நாங்கள் தயார் இல்லை. நாங்கள் அழகு பார்த்த முதல்வர் பதவியை நீங்கள் துறக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா