(பாறூக் பெரிஸ்)
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இரண்டாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தில் 4வது அமர்வில் 2013 நவம்பர் மாதம் எமது நாட் டில் நடைபெற உள்ள பொதுநலவாய இளைஞர் மகாநாடு தலைப்பிற்கு அமைவாக இளைஞர்கள் வேலை தொழில் முறைமைகள் என்ற தலைப்பில் தொழில் வழிகாட்டல் செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இலங்கையின் சனத்தொகையில் 26மூ இளைஞர்களாக காணப்படுகின்றனர். இவ் இளைஞர்களின் வேலை, தொழில் முறையாக்கல் சம்பந்தமாக ஆராய்ந்து, எமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலையின்மை பிரச்சினை ஏற்படாதவாறு நாட்டில் உள்ள புத்திஜீவிகளினதும், தொழில் நிபுணர்களினதும் கருத்துக்களை உள்வாங்கி சரியான திட்டம் ஒன்றை உருவாக்கி எமது இளைஞர்களிடையே கொண்டு செல்வது, இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நம் அனைவரினதும் கடமையாகும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
தற்காலத்தில் நகர்ப்புர இளைஞர்களை விட கிராமப்புர இளைஞர்களின் தொழில்கள் ஒரு ஒழுங்குபடுத்தப்படாத செயன்முறையாகவே காணப்படு கின்றது. காரணம் நகர்ப்புர இளைஞர்களின் பாடசாலைக் கல்வியானது, ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி வரை நவீன விஞ்ஞான கூடங்கள், கணனி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள,; இலத்திரணியல் நூலகங்கள் போன்ற வழங்களையும், நவீன பொறிமுறைகளையும் கொண்டு கற்பிக்கப் படுகின்றது. ஆனால் கிராமப்புர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர் களுக்கு, நகர்ப்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இருக்கும் வசதிகள் கிடைப்;பதில்லை.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
நகர்ப்புர இளைஞர்கள் தமது சாதாரணதர அல்லது உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகளைப் பார்த்து விட்டு, அவர்களது ஆர்வத்திற்கும், திறன்களுக்கு ஏற்ப தமது கல்வியை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில் பயிற்சி அதிகார சபை மற்றும் ஏனைய தனியார் கல்வி நிறுவனங்களின் ஊடாக அவர்கள் விரும்பிய துறையில் உயர் கல்விகளைக் கற்கின்றனர். ஆனால் கிராமப்புர இளைஞர்களுக்கு, நகரப்புர இளைஞர்களைப் போன்று கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்கள் இன்மையால், மாணவர்கள் பாடசாலைக்கல்வியை இடை நிறுத்துகின்றனர். ஓரு சிலர் தமது கல்வியை சாதாரணதரம் மற்றும், உயர்தரம் வரையும் கற்கின்றனர். பல்கழைக்கழகம் செல்வது தவிர்ந்த ஏனையவர்கள், தமது கல்வி பாடசாலைக் கல்வியோடு நிறைவடைந்து விட்டது என எண்ணி கொண்டு, தமது கிராமங்களில் உள்ள பாரம்பரிய கூலி தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இவர்களுக்கு பாடசாலை பாடவிதானவிற்கு மேலான தொழில்நுட்ப கல்விகள் சம்பந்தமான போதிய விளக்கம் இன்மையே இதற்கான காரணம் ஆகும். இதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் இன்னும் மாணவர்கள் அதன் பலனை அனுபவிக்காதவர்களாக இருப்பது துரதிஸ்டமானதாகும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
எமது அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் அரசாங்கம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க எடுக்கின்ற முயற்சியை மனமாரப் பாராட்டுகின்றேன். அத்தோடு தரமான உயர் கல்வியை வழங்கும் நோக்கில்,
• அரச பல்கலைக்கழகங்களை நாட்டில் பல பாகங்களிலும் நிறுவுதல்.
• வெளிநாட்டு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையை ஊக்குவித்தல்.
• கா.பொ.த.(உ.த) பாடநெறிக்குள் கலை, வர்த்தக, விஞ்ஞான பிரிவைப் போன்று தொழில்நுட்ப பிரிவை அரசாங்கம் புதிதாக உருவாக்கியுள்ளது.
• தொழில்நுட்பக் கல்லூரிகளெல்லாம் தரமுயர்த்தப்படுகிறது.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இது இவ்வாறிருக்க, எமது நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் இன்று புகழ் பெற்று விளங்குவது, தனியார் கல்வி நிறுவனங்களாகவே காணப்படுகின்றன. அரச கல்வி நிறுவனங்களில் காணப்படும் தொழில் நுட்ப துறை சார்ந்த பாட நெறிகள் தொடர்பில் மாணவர்கள் போதிய அறிவின்றியும், நாட்டமின்றியும் உள்ளனர். இதை சீர்படுத்த அரசாங்கம் எடுத்து வருகின்ற முயற்சிகள் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க வில்லை
கௌரவ சபாநாயகர் அவர்களே!
பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கு மாணவர்கள் காட்டும் ஆர்வம், தொழில்நுட்ப கல்லூரிகளில் காட்டுவதில்லை. இதைச் சீர்படுத்தும் பொருட்டு தொழில் நுட்ப கல்லூரிகளில் காணப்படுகின்ற, னுipடழஅயஇ உயர் தேசிய னுipடழஅய போன்ற பாடங்களுக்கான அனுமதியையும், ஒரு குறிப்பிட்ட வெட்டுப் புள்ளியை அடிப்படையாகக் கொண்டு, பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க கோரும் அதே காலப்பகுதியில் தொழில்; நுட்பக்கல்லூரிகளில் காணப்படும் குறிப்பிட்ட பாடங்களுக்கும், குறிப்பிட்ட வெட்டுப் புள்ளிகளை பெற்ற மாணவர்களை வின்னப்பிக்குமாறு கோர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
மேலும், தொழில்நுட்ப கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களைப் போன்று நவீன வசதிகளைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். 'எமது நாட்டில் உள்ள பழமை வாய்ந்த தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான, சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி கடந்த பல தசாப்தங்களாக எது வித அபிவிருத்தியும் காணாத கல்லூரியாக காணப்படுவதால், இக் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கு, இளைஞர்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை'.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
எமது நாட்டிலுள்ள துறைசார் நிபுணர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையில் ஒரு வலையமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம்
• சுயமாக தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு சுய தொழிலில் முன்னனியில் திகழ்கின்ற நிறுவனங்களுக்குமிடையே, அடிக்கடி சந்திப்புக்களையும், பயிற்சி களையும் வழங்குவதன் ஊடாக, சுயதொழில் துறையை விருத்தியடைய செய்யலாம்.
• கல்விமான்களுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான சந்திப்பை அடிக்கடி ஏற்படுத்துவதனூடாக சிறந்த கல்விச் சமூகம் ஒன்றை ஏற்படுத்தலாம்.
• இளைஞர்களுக்கு அவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பாடசாலை மற்றும் கிராமிய மட்டத்தில் பயிற்சி நெறிகளை நடத்தல் வேண்டும். பாடசாலைக் காலங்களிலேயே, மாணவர் களிடமிருந்து, விசேட திறன்களை அடையாளங்கண்டு, அதை நோக்கி மாணவர்களை வழிப்படுத்தக் கூடிய பொறி முறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இளைஞர்களின் திறமைகள், கண்டுபிடிப்புக்கள் ஊக்குவிக்கப்பட்டு, அதன் அபிவிருத்திக்கு அரச நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்பட வேண்டும். வருடாந்தம் இளைஞர்களின் கண்டுபிடிப்புக்களுக்கான, கிராமிய மட்டத்தில் பாராட்டுக்களும், பரிசில்களும், ஊக்கவிப்புக்களும் வழங்கப்படல் வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இந்த நடவடிக்கைகளை திறன்படச் செய்கின்ற பணியில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படல் வேண்டும். இத் திட்டத்தின் ஊடாக, எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின், ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக, இலங்கையை மாற்றும் முயற்சிக்கு பங்களிப்பு செய்யும் பணியை, 'இளைஞர்களை வலுவூட்டுதல்' என்ற திட்டத்தின் மூலம், முன்கொண்டு செல்ல, இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், அற்பணிப்போடு உள்ளோம் என்பதை இந்த நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ சபாநாயகர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி

0 comments:
Post a Comment