இன்று (24) நல்லிரவில் சம்மாந்துறைப் பிரதேசத்துக்குள் நுளைந்த காட்டு யானைகள் கூட்டம் பல பிரிவுகளாக பிரிந்து சம்மாந்துறை கல்லரிச்சல், கைகாட்டி, மலையடிக்கிராமம் போன்ற பிரதேசங்களிலுள்ள கடைகள், வீடுகள், தோட்டங்கள் என்வவற்றுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானைகளின் நுளைவை அவதானித்த பொதுமக்கள் நல்லிரவில் பலத்த அச்சத்துக்கு மத்தியில் தீப்பந்தங்கள், பட்டாசி வெடிகள் என்பவற்றை கொழுத்தி காட்டு யானைகளை விரட்டியயுள்ளனர்.
இதேசமயம் பிரதேச மக்கள் சம்மாந்துறைப் பிரதேச செயலாளருக்கு இச்சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து பொலிசாருக்கம், வனவிலங்க அதிகாரிகளுககும் தெரிவித்து அடுத்த அவ்விடத்துக்கு பொலிசார் வரவளைக்கப்பட்டனர் அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டனர். வனவிலங்கு அதிகாரிகள் யாரும் அவ்விடத்துக்கு சமுகம் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.





0 comments:
Post a Comment