(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை கல்வி மேம்பாட்டுக்கான அமைப்பானது ஒய்வூதியர் நலன்புரி அமைப்பின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்படி அமைப்பின் தலைவரும் சம்மாந்துறை நமபிக்கையாளர் சபையின் தலைவருமான DR. M.Y.M. முஸ்தபா தலைமையில் ஊரின் பல்வேறு கல்வியலாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு பல தடவைகள் கூட்ப்பட்ட பொழுதும் பலரினுடைய சமூகமளிப்பு இன்மையால் இதில் ஆர்வமாக உள்ளவர்களைக் கொண்டு கடந்த 2013.10.13 ம் திகதி இவ் கல்விச் சபைக்கான தற்காலிக நிறுவாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பின் கன்னிக் கலந்துரையாடலானனது 2013-10-18ம் திகதி அல் அமீர் வித்தியலயத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் இவ் இடைக்கால குழுவும் சம்மாந்துறை கல்வி அபிவிருத்தியில் ஆர்வமுள்ள சில இளைஞ்ஞர்களும் கலந்து கொண்டு எமது ஊரின் கல்வி தொடர்பான விடயங்களை கலந்துரையடியதுடன் இதனை எவ்வாறான வழிகளில் தீர்ப்பதற்கு முயற்சிக்காலாம் எனவும். எவ்வாறு உண்iமான பிரச்சினைகளை அடையாளம் காண்பது எனவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன்.
இன்ஷா அல்லாஹ் இவ் சபையானது எவ்வாறான பக்கச்சார்புகளும், சுய நலன்களும் அற்றவிதத்தில் செயற்படுவது என்ற இறை உறுதியுடனும் இக் கூட்டம் நிறைவு கண்டது.
மேலும் இவ்வமைப்பில் இனைந்து கொண்டு எமது மண்ணின் கல்வி உயர்ச்சிக்கு உழைக்கும் ஒவ்வெருவரரையும் இவ் சபை அழைக்கின்றது அழைக்கின்றது.
தொடர்புகளுக்கு: 0777 866068



0 comments:
Post a Comment