(ஹனீபா)
திருக்கோவில் கல்வி வலயப் பிரிவில் உள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் எட்டு (08) மில்லியன் ரூபாச் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 'மகிந்தோதயா ஆய்வு கூடத்தின்' அடிக்கல் நடும் வைபவம் (21.10.2013) காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் எஸ்.ரவிந்தீரன் தலைமையில் நடைபெற்றுது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினரும் திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத்தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவும் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெட்ணம் ஆகிகோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டிவைத்தனர்.
திருக்கோவில் கல்வி வலயப்பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் மூலம் பாடசாலையின் பார்த்திருப்போர்மண்டபத்தை நவீனப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவினால் ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டமும் இன்றைய தினத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்


0 comments:
Post a Comment