இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/04/2013

மல்கம்பிட்டி வீதி கொங்கிரீட் வீதியாக மாற்றுவதற்கான ஆரம்ப வைபவம் Photos

(ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான்)
புறநெகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டி 14ம் வீதி 13.2 மில்லியன் ரூபா செலவில் கொங்கிரீட் வீதியாக மாற்றுவதற்கான ஆரம்ப வைபவம் இன்று (04) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் எ.எம்.எம். நௌஷாட், சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கெ.எல்.ஹம்சார், பிரதேச சபையின் செயலாளர் எ.ஏ.சலீம், பிரதேச சபை உறுப்பினர்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகல்வில் கலந்த கொண்ட பிரதேச சபையின் தவிசாளர் எ.எம்.எம். நௌஷhட் உரையாற்றுகையில் எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை நிறைவு செய்ததன் பின்னர் இந்த நாட்டை சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்வதில் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றார் அவருடை இந்த சேவையின் மூலமாக எமது நாட்டில் வீதி அபிவிருத்திகள் மிகவும் பாரிய வளர்ச்சி கண்டுள்ளதை நாம் எமது கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி சகலதுறைகளும் அபிவிருத்தி கண்டுள்ளது அதாவது கல்வி,சுகாதாரம், விவசாயம் ,நீர்பாசனத்துறை, மின்சாரம், விளையாட்டு என சகலவற்றிலும் முன்னேறிக் கொண்டு வருகின்றது.

இதன் அடிப்படையிலேதான். எமது பிரதேசம் கூட பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது இன்னும் பல மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரித்தார்.

அத்துடன் இதுவரையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகளவு அபிவிருத்திகள் செய்யப்பட்ட முஸ்லீம் பிரதேசம் சம்மாந்துறை எனவும் தெரிவித்தார் அவர் இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படுகின்ற வீதிகளை நாம் பாதுகாக்க வேண்டும் அது எமது செத்தாகும் எனவும் தெரிவித்தார்.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா