இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/04/2013

தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவக்குழுக்களுக்கிடையிலான கைகலப்பு தொடர்பான மேலதிக செய்திகள்


(ஹனீபா)
நேற்றைய தினம் இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் மாணவக்குழுக்களுக்கிடையிலான கைகலப்பு தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரனை இன்று (04) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமண்றத்தில் பதில் நீதிபதி நஸீல் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பொலிஸ் தரப்பில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் பதீல் பொலிஸ் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி அஜித் ரோஹண சட்டத்தரணி சீருடையில் ஆஜராகியிருந்தார்.

இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட 2ம் ஆண்டு மாணவர்கள் சார்பில் சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களும், இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒலுவில்வளாகத்தின் 3ம் ஆண்டு வர்த்தக முகாமைத்துவப் பீட மாணவர்கள் சார்பாக சட்டத்தரணி சுணில் திசானாயக்கா ஆகியோர்களும் ஆஜராகியிருந்தனர்.

முத்தரப்பினதும் காரசாரமான வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் பல்கலைக் கழக வளாகத்தின் அமைதியினை நிலைநாட்டும் வகையிலும் இந்த சம்பவத்தின் பின்னணிகளை கண்டறியும் நோக்குடனும்; தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒலுவில்வளாகத்தின் 3ம் ஆண்டு வர்த்தக முகாமைத்துவப் பீட மாணவர்கள் 42 பேருக்கும்;, தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின்; 2ம் ஆண்டு சம்மாந்துறை விஞ்ஞான பீட மாணவர்கள் அண்கள் 08 பேரும். பேண்கள் 04 பேருமாக 54 மாணவர்களையும் எதிர்வரும் 08ம் திகதி செவ்வாய்க்கிழமை வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிபதியினால் தீர்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொலிஸ் தரப்பின் சட்டத்தரணியாக ஆஜராகிய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் பதீல் பொலிஸ் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி அஜித் ரோஹண வை சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களால் வரவேற்கப்பட்டு சட்டத்தரணிகளின் இருக்கையில் அமர வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மாணவ குழுக்களுக்கிடையில் எற்பட்ட கைகலப்பில் 23 மாணவர்கள் சம்மாந்தறை அன்வர்இஸ்மாயீல் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தககதாகும்.
இனறைய தினம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான பொலிஸாரும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சூழ்ந்து காணப்பட்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா