இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/18/2013

நிசாம் காரியப்பர் மேயர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

• •

கல்முனையின் புதிய முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர முதல்வராக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
 
சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துஆப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து  அங்கிருந்து மாநகர சபை அலுவலகம் வரை ஊர்வலமாக  அழைத்துச்செல்லப்பட்ட பின்னர் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
 பள்ளிவாசல் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள்,  மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலத்தில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள உட்பட அரசியல், சமூக  பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Bas VV



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா