இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/04/2013

லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விளிப்புணர்வுச் செயலமர்வு

• •

(ஹனீபா)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விளிப்புணர்வுச் செயலமர்வும் பலாமரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) ஞாயிற்றுக் கிழமை துறை நீலாவனை பல்தேவைக் கட்டிடத்தில் ஆசிரியரும் ஊடகவியலாளருமான எஸ்.நடனசபேசன் தலைமையில் நடைபெற்றது.

துறை நீலாவனை கல்வி சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பு மற்றும் அம்பிகை மகளிர் அமைப்பு என்பவற்றின் வெண்டு கோளுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ 2 மாவட்டத்தின் வலயம் 2ன் வலயத் தலைவர் லயன் கே.பொன்னம்மலம்,  கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலவைர் எஸ்.சிறிரங்கன், செயலாளர் லயன் ஏ.ஜே.எம்.ஹனீபா, பொருளாளர் லயன் பீ.ஜே.பத்திரன, லீயோ கழகத் தலைவர் நிதான்ஷன், செயலாளர் தர்ஷpனி, மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் இராஜதுரை, நில அளவையாளரும் துறை நீலாவனை கல்வி சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான எஸ்.மன்மதன், கமநல சேவை உத்தியோகத்தர் வினோதன், கிராமசேவை உத்தியோகத்தர் ரீ.கோகுலராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா