இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/06/2013

புலமைப்பரிசில் ,சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னோடியாக முகையடீன் கல்வி அமைப்பினால் நடாத்தப்பட்ட பரீட்சை பெறுகளின் அடிப்படையில் அதில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களின் அதிகமானோர் தேசிய புலமைப்பரிசில் பரீட்சையில் அதனை ஒத்த புள்ளிகளைப் பெற்றார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 01.11.2013  (வெள்ளி) ஆந் திகதி பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் தலைமையில் நடைபெற்றதுடன் திறமை காட்டிய மாணவர்களுக்கான சான்றிதழினை தரம் 5 வகுப்பிற்கு கற்பித்த ஆசிரியர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது அவர்களாவன திருமதி மன்சூர றஹீமா, திருமதி றிம்லான் அமீறா, திருமதி ஏ. பீ. பரீதா,  எஸ். எல். மன்சூர் ஆகியோருமாகும்.

இம்முறை இப்பாடசாலையில் 41 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததுடன மாவட்டத்தில் ஏ.எம். ஸிஹானுல் ஹனீன் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார் என்பது குறிப்பித்தக்கதாகும். அவர் இப்பரீட்சையில் 192 புள்ளகளைப் பெற்றுள்ளார். 

தகவல் ஏ.எம். தாஹாநழீம் - பிரதி அதிபர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா