இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/19/2013

கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சை


கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

ஆண்களுக்கேயான பிரத்தியேக  மார்புக்கச்சையை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

'புஷ் அப்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மார்புக்கச்சையானது ஆண்கள் அணியும் டீசெர்ட் மற்றும் ஏனைய மேல் அங்கிகளில் இணைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதனை டி சர்ட் மார்புக்கச்சை என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான மார்புக்கச்சையை போன்று அல்லாது  டி சர்ட்டுடன் கூடிய பிராவாக இது காணப்படுவதால் இவ்வாறு டி சர்ட் பிரா என்றும் அழைக்கின்றனர். 

பெஷன் வடிவமைப்பாளர்கள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதானது ஆண்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சிலருக்கு கோப்பதை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஆண்கள் புஷ் அப் மார்பு கச்சையை அணியும்போது அது ஆண்களின் நெஞ்சை அது நிமிர்த்திக்காட்டுவதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சல்மான்கானின் உடல்வாகு இல்லாத ஆண்கள் இந்த பிராவை அணிந்தால் அவர்களது உடல்தோற்றம் எடுப்பாக காணப்படும் என பெஷன் வடிவமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

 'எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப்பிரசாதம்தான். ஒருப்பக்கம் இது நகைச்சுவையாக  இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து' என  பொலிவுட் நடிகரான இஜாஸ் கான்   என்றார்.
»»  read more

11/13/2013

தெரு நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்!


தெருவில் அனாதரவாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்றிற்கு திடீர் அதிர்ஷ்டமாக எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட முதல் நாய் என்ற பெருமை கிடைத்துள்ளது. 

காஷ்மீரில் லே எனும் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த நாயை முன்னாள் கோப்ல் வீராங்கனையான ஜோன் லெப்சன் என்பவர் கண்டு, இரக்கப் பட்டு தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். 

அந்த நாய்க்கு ரூபி எனப் பெயரிட்ட வீராங்கனை, அதனை தன்னுடன் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ரூபியின் எவரெஸ்ட் பயணம் குறித்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் லெஃப்சன். 

இந்த சாதனைப் பயணத்தின் மூலம், எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட முதல் நாய் என்ற பெருமையைப் பெற்றுள்ளது 11 மாத ரூபி.

ரூபி குறித்து லெப்சன் கூறும்போது, ‘ரூபி குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். சில நாட்கள் மட்ட்மே உடன் வைத்திருக்கலாம் என நினைத்துத் தான் நான் ரூபியை உடன் அழைத்துச் சென்றேன், ஆனால், என்னை மேலும் பயணம் செய்ய தூண்டியதே ரூபி தான். 

ரூபியின் இச்சாதனை மூலம் தெரு நாய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார். 

மேலும், ரூபிக்கு பனியின் சுவை மிகவும் பிடித்துள்ளதாகவும், பனியில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார் லெப்சன். 

லெப்சன் தன்னுடன் உலகம் சுற்றிய தனது முன்னாள் செல்லப்பிராணியான ஆஸ்கர் என்ற நாய்க்கு தன்னுடைய புத்தகம் ஒன்றை சமர்ப்பணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. 
»»  read more

11/01/2013

இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜூக்கு அதிக மவுசு


பெரும்பாலான சுற்றுலா இடங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. 

இந்நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சற்று வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. 

உடலில் மலைப்பாம்புகளை தவழ விடப்பட்டு செய்யப்படும் இந்த மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பும் பெருகியுள்ளது, ஏராளமான மக்கள் இந்த மசாஜ் நிலையதிற்கு வந்து குவிகின்றனர். 

இங்கு பயன்படுத்தப்படும் பாம்புகள் அனைத்தும் விஷத்தன்மை இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
»»  read more

10/22/2013

அணில், பாம்பு, பல்லியை உணவாக உட்கொண்ட நபர்


வனப் பகுதிக்கு சென்ற வேட்டைக்காரர் ஒருவர் 19 நாட்களாக பல்லி, பாம்பு மற்றும் அணில்களைச் உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.


அமெரிக்காவைச் செர்ந்த ஜெனி பெனாப்ளோர் என்ற நபரே இவ்வாறு பல்லி, பாம்பு, அணில்களை உணவாக உட்கொண்டுள்ளார்.



இவர் தனது நண்பருடன் அமெரிக்காவின் மென்டோசினோவில் உள்ள தேசிய காடொன்றுக்கு வேட்டைக்காக சென்றுள்ளார்.
அங்குச் சென்ற இருவரும் பிரிந்து தனித்தனியாக வேட்டையாட சென்றுவிட்டனர். இவ்வாறு சென்றபோது ஜெனி எதிர்பாராதவிதமாக தலையில் அடிப்பட்டு மயங்கி வீழ்ந்துள்ளார்.



மயக்கம் தெளிந்து எழுந்தபோது இரவாகியிருந்ததை அறிந்த அவர், செய்வதறியாது அன்றைய இரவை காட்டிலே செலவழித்துள்ளார்.



மறுநாள் வீடு திரும்ப முயற்சித்த ஜெனி பாதை தவறி காட்டின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளார். பலவாறு அலைந்து திரிந்தும் அவர் வீட்டிற்கு செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கவில்லை. 



இந்நிலையில், 19 நாட்களை காட்டிலே செலவழித்த அவர் 19 நாட்களும் உணவாக பல்லி, அணில், பாம்பை உண்டுள்ளதுடன் ஆற்றுநீரை உண்டு வாழ்ந்துள்ளார்.



இந்நிலையில், ஒருநாள் காட்டுப் பகுதியில் ஹெலிகொப்டர் சென்றதை பார்த்த ஜெனி, அவர்களிடம் உதவி கேட்க புகை மூலம் சமிக்ஞை கொடுத்துள்ளார். ஆனால், ஹெலிகொப்டரில் பயணித்தவர்கள் அதனை கவனிக்கவில்லை.



இதற்கிடையே வனப்பகுதிக்குள் காணாமல்போன அவரை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். அக்குழுவினர் மிகவும் சிரமப்பட்டு அலைந்து திரிந்து 19 நாட்களுக்கு பிறகு அவரை மீட்டுள்ளனர். 



உடல்நலம் பாதித்த நிலையில் இருந்த ஜெனி, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு உகியா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
»»  read more

10/08/2013

இளமையாக இருக்க சிறுநீர் அருந்தும் பெண்


உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கடந்த 20 வருடங்களாக பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறுநீரை காலை பானமாக அருந்தி வருகின்றார்.

பிரிட்டனைச் சேர்ந்த சில்வியா சென்டலர் என்ற பெண்ணே இவ்வாறு செய்து வருகின்றார்.

இவர் தினமும் காலை வேளையில் ஒரு கோப்பை சிறுநீரை அருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

63 வயதுடைய இவர், பார்வைக்கு மிகவும் இளமையானவராகவும் ஆரோக்கியமுடையவராகவும் காணப்படுகின்றார். தனது இளமையான தோற்றத்திற்கு சிறுநீரே காரணமென அவர் உள்நாட்டு சஞ்சிகையொன்றுக்கு கூறியுள்ளார்.

தனது சிறுநீர் அருந்தும் செயற்பாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக அவர் வைத்தியசாலையில் 

சிகிச்சைபெற்றுகொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

'நான் எனது சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் உள்ளேன். சிறுநீரானது எனது இளமையை பாதுகாக்கின்றது. எனக்கு 62 வயது என்று கூறினால் ஆண்கள்; ஆச்சர்யப்படுகின்றார்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.

'நான் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு கோப்பை சிறுநீரை அருந்துகின்றேன். அது சுவையாகவும் நீரை போன்றும் காணப்படுகின்றது. ஆனால், நீரைவிடவும் இனிப்பாக காணப்படுகின்றது.

நான் கடந்த 10 வருடங்களாக வைத்தியரை அணுகியதில்லை.  அதேபோல் எனக்கு தடுமலும் ஒருநாளும் ஏற்பட்டதில்லை. அதேபோல் கடந்த 10 வருடங்களாக உடற்பருமனை ஒரே அளவில் வைத்திருக்கிறேன்.

இதேவேளை இப்பெண், தனது முகத்தையும் தலை மயிரையும் சிறுநீரை கொண்டு கழுவி சுத்தம்செய்வதாக கூறியுள்ளார்.
பிரிட்டனின் பேர்மிங்கத்தில் மருந்து விற்பனை நிலைய உரிமையாளராக உள்ள மேற்படி பெண் முதலில் சிறுநீரை அருந்துவதற்காக சிரமம்கொண்டதாகவும் பின்னர் பழச்சாறுகளுடன் கலந்து அதனை அருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
»»  read more

10/07/2013

ஹங்கேரியில் பேராசிரியையுடன் மாணவிகள் நிர்வாண போராட்டம்

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுபாடு விதித்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், டீ ஷர்ட் அணிய கூடாது. அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. பல்கலை நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவுக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களது பேராசிரியை தலைமையில் ஆடை கட்டுபாட்டை கண்டித்து வகுப்பறைக்கு நிர்வாணமாக வந்து பாடம் படித்தனர். நிர்வாகம் தனது விதிகளை தளர்த்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் பல்கலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ, மாணவிகள் நிர்வாணமாக வகுப்பறைகளில் பங்கேற்ற புகைப்படங்கள் உள்ளூர் நாளேடுகளில் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்ப்பு பெரிதானதை அடுத்து மாணவர்களுடன் பல்கலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
»»  read more

10/05/2013

முகத்தில் வளர்ந்த தாடியை அகற்ற முடியாமல் அவதியுறும் பெண்


இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, பிரசவத்திற்குப் பின் தாடி வளர்ந்ததால், முகத்தை மறைத்த படி நடமாடுகிறார். 

இந்தோனேஷியாவின், பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா, 38. இவருக்கு, 19 மற்றும், 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு, 25 வயதாக இருக்கும்போது, முதல் குழந்தை பிறந்தது. 

அதன் பின், இவருடைய முகத்தில், திடீரென முடி முளைக்க ஆரம்பித்தது. 

தாடியை அகற்றும் போது, கடும் வலி ஏற்பட்டதால், அப்படியே விட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

மேலும் கடந்த 19 ஆண்டுகளாக, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, முகத்தை மறைத்தவாறு சென்று வருவதாகவும், வீட்டிற்குள்ளும், தன்னுடைய குழந்தைகள் பரிகாசம் செய்வார்கள் என்ற பயத்தில், முகத்தை மறைத்தே வாழ்ந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். 

இதேவேளை தனது மார்பிலும் முடி வளர்ந்துள்ளதாகவும், அகஸ்டினா தெரிவித்துள்ளார். 

"இந்த வாரத் தொடக்கத்தில், முதன் முதலாக, முகத்தை மறைக்காமல் வெளியே வந்தபோது, மக்கள் விசித்திரமாக பார்த்தார்கள்,´´ என அகஸ்டினா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
»»  read more

9/30/2013

ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு


ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம். 

மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம். 

இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. 

இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் தொடங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது. 

இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
»»  read more

9/03/2013

இருச்சக்கர வாகனத்தில் பயணித்தபடி தாய்ப்பால் கொடுத்த பெண் கைது


சீனாவில் ஒரு பெண், இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் ஓர் இளம்பெண் தனது 18 மாத ஆண் குழந்தையுடன் ’மொபட்’ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது குழந்தை பசியால் அழுததன் காரணமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபடியே டி-சர்ட்டை விலக்கி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியுள்ளார். 

இது தாய்மைக்கே உரித்தான செயல் என்ற போதிலும், போக்குவரத்துப் பொலிசாரே அவரை தடுத்து நிறுத்தி மொபட்டை பறிமுதல் செய்துள்ளனர். 

‘குழந்தையின் உயிரை காப்பாற்ற அவர் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார். ஆனாலும் விபத்து நேர்ந்தால் அவர் உயிர் மட்டுமின்றி, மற்றவர் உயிர் போய்விடும் என்பதால் நடவடிக்கை எடுத்தோம்’ என பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.
»»  read more

8/26/2013

இறந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவர் 13 நாட்களின் பின்னர் உயிருடன் வந்தர்


இறந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவர் 13 நாட்களின் பின்னர் உயிருடன் வந்தச் சம்பவமொன்று பிலடெல்பியாவில் இடம்பெற்றுள்ளது.


இப்பெண் உயிருடன் வந்தததைக் கண்டு அவரது குடும்பத்தார் மட்டுமன்றி பலர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.



செரோலின் ஜெக்கோன் என்ற பெண்ணே இவ்வாறு 13 நாட்களின் பின்னர் உயிருடன் திரும்பியுள்ளார்.



இவர், கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி காணாமல் போனாதாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.



இந்நிலையில் முறைப்பாடு செய்து இரண்டு நாட்களின் பின்னர், பெண் ஒருவரின் சடலம் தெருவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்  அச்சடலம் காணாமல் போன அந்த பெண்ணின் சடலமா என்பதை உறுதி செய்யுமாறும் பொலிஸார்  மேற்படி குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.



இந்நிலையில் குறித்த சடலத்தை பார்வையிட்ட மேற்படி பெண்ணின் மகன் அது காணாமல் போன தனது தாயின் சடலம் என உறுதி செய்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் இறுதி கிரியைகளை நடத்துவதற்கு குடுபம்பத்தினர் தீர்மானித்தனர்.



இதற்கமைவாக அப்பெண்ணின் பூதவுடலை நல்லடக்கம் செய்துவிட்டு அப்பெண்ணின் கடந்த கால நினைவுகளுடன் மட்டும் பெற்றோர் வீடு திரும்பினர்.



சோகத்தில் ஆழந்திருந்த குடும்பத்தினருக்கு எதிர்பாராத விதமாக இன்ப அதர்ச்சி ஒன்று கிடைத்துள்ளது.



 நல்லடக்கம் செய்யப்பட்ட தனது மகள் உயிருடன் இருப்பதாகவும் அவர் உலநல சிகிச்சையை பெற்றுகொண்டு இருப்பதாகவும் அதிகாரிகள் அக் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.



இதனைக் கேட்டு அதர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் குறித்த பெண் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டனர்.



'எங்கள் மகள் உயிருடன் இருப்பதை கேட்டு நாங்கள் மகிழச்சியடைந்தோம். ஆனால், எங்கள் மகள் என கருதி முகம்தெரியாத ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்தது மிகவும் வேதனை அளிக்கின்றது' என ஜெக்சனின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளானர். 



'அடக்கம் செய்யப்பட்ட அப் பெண் யாரென இதுவரை பொலிஸார் கண்டறியவில்லை. எனவே புதைக்கப்பட்ட அச்சடலத்தை மீண்டும் தோன்றி எடுக்க வேண்டும் என நான் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்'  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
»»  read more

8/18/2013

கடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ

கடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ

http://www.youtube.com/watch?v=-cncSthvFoM&feature=player_embedded

»»  read more

8/15/2013

நாய் வேடமிட்டு பூனையுடன் உறவுகொண்ட நபர் கைது


நாயைப் போன்று வேடமிட்டு பூனையுடன் உறவுகொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
 
அமெரிக்காவின் இடோவைச் சேர்ந்த ரயன் ஹெனென்ஸ் டெனெஹோல்ஸ் என்ற 28 வயது நபரே இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

மிருகங்களைப் போன்று வேடமிடுபவன் என அனைவராலும் நன்கு அறியப்பட்ட மேற்படி நபர் தான் வளர்த்து வந்த பூனையுடன் ஒருவருடமாக உறவுகொண்டு வந்துள்ளார். 

இவர்,   நாய், ஓநாய் போன்ற மிருகங்களின் வேடங்களை இட்டு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

இவ்வாறு கலந்துகொண்ட நிகழ்வுகளில் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் பொலிஸாரினால் கடந்த 1 ஆம் திகதி கைதுசெய்;யப்பட்டார்.

தவறான நடத்தை, மிருகவதை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சாட்டப்பட்டுள்ளன.

பூனைகள் மீதான் விருப்பம் குறித்தும் தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்துவரும் பூனையின் பெயரையும் இணையத்தளம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ளார். 

'மிகவும் மென்மையான உரோமம் கொண்ட பூனைகள் மிகவும் அன்பானவையும்கூட' என அவர்  குறித்த இணையத்தளத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பூனையுடன் உறவுகொண்ட விடயம் வெளிச்சத்துக்கு வர அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. 

இதற்கமைவாக அவர் 1 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் 5 வருட சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும்' என தெரிவிக்கப்படுகிறது.
»»  read more

8/14/2013

பெண்களின் மடிபோன்ற தலையணைகள்


பொதுவாக மழலைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்குமே மடியில் தலை வைத்துத் தூங்குவது என்றால் அலாதி பிரியம் தான். 

இப்படி மடி பிரியர்களுக்காக தயாரானது தான் இந்த புதிய வகை தலையணை. ஜப்பானில் சந்தைக்கு வந்துள்ள இந்த தலையணைகள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

குறிப்பாக விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு தூக்கம் வந்தால் அவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த தலையணைகளாம். 

டோக்கியோ விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த தலையணைகளின் அமைப்பே வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள பெண்ணின் தொடையை நினைவு படுத்துகிறது இந்த தலையணைகள். 

குட்டிப்பாப்பாவிற்கு தனது தாயின் மடியில் படித்திருக்கும் சுகத்தை தருகிறதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மன பாரமான நேரங்களில் தாயின் மடியைத் தேடும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த தலையணைகள் சுகமான ஆறுதலான உணார்வைத் தருமாம். 

விமான நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் விளையாட்டாக தனது நண்பர்களுக்கு, தோழிகளுக்கு அன்பளிப்பாகவும் இதை வாங்கிச் செல்கிறார்களாம். 

சில நேரங்களில் அனைவருக்குமே வீட்டில் படுத்திருப்பது போன்ற உணர்வு தேவைப்படும். அதுபோன்ற நேரங்களில் இந்த தலையணைகளை உடன் எடுத்துச் சென்று ஹோம்சிக்கை தவிர்த்துக் கொள்ளலாம் என ஆலோசனைக் கூறுகிறார்கள் இந்தக் கடைகாரர்கள். 

மென்மையாக, தொடுவதற்கு எலாஸ்டிக் தன்மையுடன் காணப்படுவது இத்தலையணையின் சிறப்பு அம்சம். பாலியுரித்தேன் மெத்தையில், பாலிஸ்டர் ஸ்கர்ட் போட்ட பெண்ணின் தொடை போன்று காட்சி அளிக்கிறது. 

சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் இந்த தலையணைகளில் தலை வைத்து தூங்குவது மனைவி அல்லது அம்மாவின் மடியில் படுப்பது போன்ற சுகத்தை தருவதாக பயன்படுத்தியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
»»  read more

8/10/2013

பாதுகாப்பு ஊழியர்களை நோக்கி சிறுநீர் கழித்த கிரிக்கெட் வீரர்


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் வினோதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

31 வயதான பனேசர், கடந்த திங்கட்கிழமை பிரைட்டான் கடற்கரை ஓரம் அமைந்துள்ள இரவு விடுதிக்கு சென்றார். 

அங்கு ஆசை தீர மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில், அவர் அங்கு வந்த சில பெண்களிடம் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டார். 

இதனால் அவரை இரவு விடுதியை விட்டு வெளியேற்றும்படி அந்த பெண்கள், விடுதியின் பாதுகாப்பு ஊழியர்களிடம் புகார் செய்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த பனேசர், கிளப்பில் மேல்பகுதிக்கு சென்று அங்கிருந்து பாதுகாப்பு ஊழியர்களை நோக்கி சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினார். இதையடுத்து அந்த ஊழியர்கள் அவரை பிடித்து சென்று பொலிஸாரிம் ஒப்படைத்தனர். குடித்துவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாகவும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவத்திற்கு பனேசர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பனேசர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
»»  read more

8/06/2013

உலகின் மிக குட்டையான சகோதரர்கள்


அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 

இவரது உயரம் வெறும் 27 அங்குலம்தான். பிரிட்ஜெட் ஜார்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜார்டனுக்கு 20 வயது. 

பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால், பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன் பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம். 

இவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்சில் உள்ள கஸ்கசியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நடனம், சீயர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்குகள். 

பிராட், கராத்தே, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, மேஜிக் என்று பல விஷயங்களில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். 

28.5 அங்குல உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன்தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவரை முந்திவிட்டார், பிரிட்ஜெட். 

பூமியில் பிறந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்டர்ஸ்தான். அவரது உயரம் வெறும் 24 அங்குலம். 

அவர் கடந்த 1895-ம் ஆண்டு தனது 19-வது வயதில் நிமோனியாவால் இறந்துவிட்டார்.
»»  read more

7/28/2013

வாலுடன் பிறந்த சிறுவனை கடவுளாக மதிக்கும் மக்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதேகார் சாஹிப் மாவட்டத்தில் நபிபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 12 வயது முஸ்லிம் சிறுவன் அர்ஷித் அலி கான் வாலுடனேயே பிறந்தார். இவரை அனுமார் என்று கும்பிட்டு வருகின்றனர். கீழ் முதுகுப் பகுதியில் விலங்குகளுக்கு இருப்பது போலவே அவருக்கு வால் முளைத்துள்ளது. பிறவியிலேயே அப்படித்தான். இந்தச் சிறுவனை இந்துக் கடவுள் அனுமன் என்றே கும்பிட்டு வருகின்றனராம். பல ஊர்களில் இருந்தும் வந்து இந்தச் சிறுவனுக்கு காணிக்கைச் செலுத்தி கும்பிட்டு வருகின்றனராம். பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் கும்பிட வருவதாக சிறுவனின் தாத்தா இக்பால் குரேஷி கூறுகிறார். கருவில் ஏற்பட்ட ஏதோ கோளாறினால் வால் போன்ற அமைப்புடன் பிறந்த இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து சமுதாயத்தில் நடமாட வைக்காமல் அவரை தெய்வமாக வழிபட அந்தக் குடும்பம் அனுமதித்து வருகிறது.
»»  read more

7/27/2013

பூனையுடன் பாலியல் உறவுகொண்ட யுவதி நெருக்கடியில்


பூனையுடன் பாலியல் உறவுகொண்டதை அறிந்த வயோதிபரை யுவதி ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்வமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத.

அமெரிக்கா, ஒக்லஹோமா நகரில் வசிக்கும 23 வயதான கிறிஸ்டினா மைக்கல் பிரவுண் எனும் யுவதியே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்துவரும் எல்மர் மொரிஸன் என்ற 72 வயது வயோதிபரையே இவ்வாறு கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி மேற்படி வயோதிபரின் வீட்டுக்கு முன்னால் கத்தியுடன் நின்றுகொண்டு, வயோதிபரை வெளியில் வருமாறு கத்தியுள்ளார்.

யுவதியின் செயற்பாட்டை கண்டு அஞ்சிய வயோதிபர் அது தொடர்பில் பொலிஸில் அறிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 
விசாரணையின் போது குறித்த யுவதி,  

'நான் பூனையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன். இதனை மொரிஸன் அறிந்துகொண்டதுடன் இவ்விடயத்தை ஊரிலுள்ளவர்களுக்கே அறிவித்துவிட்டார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், நான் அவரை கத்தியால் குத்துவதற்கு முயன்றேன்' என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், கிறிஸ்டான குறித்த இந்த விடயத்தை தான் அறிந்திருக்கவில்லை என்றும் அது தொடர்பில் ஊரிலுள்ளவர்களுக்கு கூறவில்லை என்றும் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
 
வயோதிபரை கத்தியால் குத்த முயன்ற குற்றத்திற்காக கிறிஸ்டினா மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
»»  read more

7/13/2013

சிம்பாப்வேயில் பிரசவ வலி வந்தாலும் கத்தக்கூடாது


சிம்பாப்வேயில் பிரசவ வலியால் கத்தும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது. 

உலக நாடுகளில் நிலவிவரும் லஞ்சம் ஊழல் தொடர்பான தகவல்களை ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து சமீபத்தில் முடிவுகளை அறிவித்தது. 

ஆப்பிரிக்க நாடுகளில் லஞ்சம் பெருத்து வருவதாக அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. 

தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிம்பாப்வேயில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வேதனைக்குரிய விஷயமாக பிரசவ வலியால் கத்தினால் கூட லஞ்சம் தரவேண்டும் என்பது அங்கு எழுதப்படாத விதி. 

பொலிஸாருக்கு அடுத்தபடியாக லஞ்ச ஊழல் மலிந்த துறையாக 68 சதவீத சிம்பாப்வே மக்கள் மருத்துவ துறையை குறிப்பிடுகின்றனர்.
»»  read more

7/10/2013

ஒபாமாவும், மிச்சலும் அழகில்லை : பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவும் அசிங்கமானவர்கள் என ஒரு நடிகை கூறியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


ஆனால் அதனை சொன்னவர் யார் என்று சொன்னால், அட அவர் இந்த மாதி‌ரி சொல்லவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம் என்பார்கள். 



சில பிரபலங்களுக்கு ஒரு வியாதி, அடுத்தவர்களை மட்டம் தட்டி அந்த விளம்பரத்தில் பெயரை தக்க வைத்துக் கொள்வது நடிகை அமண்டா பைன்ஸுக்கு முற்றிய நிலையில் உள்ளது இந்த வியாதி. 



கடந்த காலங்களில் சக நடிகைள் பலரையும் இதேபோல் வம்பிழுத்திருக்கிறார். 



ஒருமுறை அவர் வம்பிழுத்தவ‌ரின் காதலர், போய் கண்ணாடியில் உன் முகத்தை பார்த்துக்கோ என்று பதிலடி கொடுத்ததும் நடந்திருக்கிறது. 



இந்தநிலையில் சமூக வலைதளத்தில் அமண்டா, அமெ‌ரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது மனைவியும் அசிங்கமானவர்கள் (Ugly) என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார். 



அவ‌ரின் இந்த அத்துமீறல் கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிகின்றன. 
»»  read more

7/06/2013

22 வயது பெண்ணை திருமணம் செய்த 92 வயது தாத்தா


ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி முகம்மது அல்-முஜ்மாயி. 

தற்போது 92 வயதை கடந்த இவர், பூர்வீகமாக விவசாய தொழில் செய்து வந்தார். இவருக்கு 16 குழந்தைகள் பிறந்தன. 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி 58வது வயதில் காலமானார். 

´பொண்டாட்டி செத்தா... புது மாப்பிள்ளை´ என்ற பழமொழிக்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்பதை இந்த 92 வது முதியவர் நேற்று நிரூபித்துள்ளார். 

தன்னை விட 70 வயது குறைவான 22 வயது இளம்பெண்ணை நேற்று மாலை திருமணம் செய்து உள்ளூர் இளைஞர்களின் கவனத்தை இவர் ஈர்த்துள்ளார். 

இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடன் இவரது பேரன்கள் இருவருக்கும் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடந்தது என்பதுதான். 

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த திருமண விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என்ற அனைத்து கேளிக்கை அம்சங்களுடனும் ஆடம்பரமாக அரங்கேறியது. 

´எனது பேரன்களுடன் ஒரே மேடையில் திருமணம் செய்துக்கொண்ட அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. 

20 வயதே ஆன இளைஞனாக என்னை உணர்கிறேன்´ என்று நமட்டு சிரிப்புடம் கூறுகிறார், புது மாப்பிள்ளை முசாலி முகம்மது அல்-முஜ்மாயி.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா