இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, பிரசவத்திற்குப் பின் தாடி வளர்ந்ததால், முகத்தை மறைத்த படி நடமாடுகிறார்.
இந்தோனேஷியாவின், பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா, 38. இவருக்கு, 19 மற்றும், 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு, 25 வயதாக இருக்கும்போது, முதல் குழந்தை பிறந்தது.
அதன் பின், இவருடைய முகத்தில், திடீரென முடி முளைக்க ஆரம்பித்தது.
தாடியை அகற்றும் போது, கடும் வலி ஏற்பட்டதால், அப்படியே விட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 19 ஆண்டுகளாக, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, முகத்தை மறைத்தவாறு சென்று வருவதாகவும், வீட்டிற்குள்ளும், தன்னுடைய குழந்தைகள் பரிகாசம் செய்வார்கள் என்ற பயத்தில், முகத்தை மறைத்தே வாழ்ந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது மார்பிலும் முடி வளர்ந்துள்ளதாகவும், அகஸ்டினா தெரிவித்துள்ளார்.
"இந்த வாரத் தொடக்கத்தில், முதன் முதலாக, முகத்தை மறைக்காமல் வெளியே வந்தபோது, மக்கள் விசித்திரமாக பார்த்தார்கள்,´´ என அகஸ்டினா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment