இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2015

நிந்தவூரில் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பும் தேர்தல் பிரச்சாரமும்

(31,12,2014) நிந்தவூரில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களினால் ஏற்பாடு செயயப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வில் சம்மாந்துறை ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்,ஏ ஹஸனலியும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரசசார குழுவன் இனைப்பாளர் எம்,எம். சமூன் (பஸீர்) அவர்களும் கலந்துகொண்டு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.


»»  read more

12/28/2014

சம்மாந்துறையில் மைத்ரி வெள்ளம் (Potos)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)

பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேனவையை ஆதரித்து இன்று 28.12.2014 சம்மாந்துறை அசரப்பா வட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

சம்மாந்துறையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் றமீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேன, முன்னால் மீன்பிடித்துறை அமைசரும் வைத்தியருமான றாஜித சேனாரத்தின, ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ கமிட்டியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான கரு ஜயசூரிய, முன்னால் பிரதியமைச்சரும் நாடளமண்ற உறுப்பினருமான அமீர் அலி, நாடாள மண்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயம் வை.எல்.எம்.ஹமீட், முன்னால் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஐ.மண்சூர், அனோமா கமகே, ஜக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி உட்பட இன்னும் பல அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன்நிகழ்வில் அதிகமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும.











»»  read more

12/14/2014

ஐ.தே.கவின் தேசிய பட்டியல் எம்.பியாக ஹஸன்அலியை நியமிக்கவும்: அம்பாரை மாவட்ட ஆதரவாளர்கள் பகிரங்க வேண்டுகோள்.

ஐ.தே.க தேசிய பட்டியல் மூலமாக ஒரு முஸ்லிமை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டுமாக இருந்தால், சம்மாந்துறை தொகுதியின் ஐ.தே.கவின் அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலிக்கு வழங்க வேண்டுமென்று ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் பலரும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்காவுக்கு பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள்.

ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கா ஆளுந்தரப்புக்கு மாறியுள்ள நிலையில், அந்த வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீனை நியமிக்க வேண்டுமென்று சிலர் முன் வைத்துக் கொண்டிருக்கும் கருத்தினை அடுத்தே இக்கோரிக்கையை அம்பாரை மாவட்ட ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் பலரும் ஹஸன்அலியை தேசிய பட்டியலில் நியமிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர்.

எம்.ஏ.ஹஸன்அலி நீண்ட காலமாக கட்சியின் உயர்ச்சியின் போதும், வீழ்ச்சியின் போதும் கட்சி மாறாது இருந்து கொண்டிருக்கின்றார். அம்பாரை மாவட்டத்தில் ஐ.தே.கவின் சார்பில் பல தேர்தல்களில் போட்டியிட்டவராகவும் உள்ளார். இவர் கட்சிக்கு காட்டி வரும் விசுவாசத்தைக் கருத்திற் கொண்டு 2004ஆம் ஆண்டு தேசிய பட்டியலில் இவரின் பெயரையும் ஐ.தே.க சேர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்சியை விட்டு மாறிச் சென்றவர்கள், தற்போதைய சூழலில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கண்டும், அடுத்த ஆட்சியை அமைக்கக் கூடிய வல்லமையை கட்சி பெற்றிருப்பதனையும் அவதானித்துள்ள சிலர் மீண்டும் கட்சிக்குள் வந்து பதவிகளை பெற்றுக் கொள்ள முனைகின்றார்கள். அத்தகையதொரு நிலைப்பாட்டினை சேகு இஸ்ஸதீனும் எடுத்துக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

சேகுஇஸ்ஸதீன் மு.காவில் இருந்து விலகி ஐ.தே.கவில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டார். பின்னர் நுஆவில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார். பின்னர் மீண்டும் மு.காவில் இணைந்து கொண்டார். தற்போது ஐ.தே.கவில் இணைய திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை ஐ.தே.கவில் இணைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க முடியாது. அதற்கு அவரின் கடந்த கால கட்சி தாவுதல்கள் சாட்சியாகும்.

எனவே, ஐ.தே.கவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சம்மாந்துறையைச் சேர்ந்த ஹஸன்அலிக்கு வழங்க வேண்டுமென்றும் அந்த பகிரங்க வேண்டுகோளில் கேட்கப்பட்டுள்ளது.
»»  read more

4/21/2013

அஸ்வர் எம் பி'க்கு சம்மாந்துறை தொகுதி UNP அமைப்பாளர் ஹசனலியின் பதில்


(எம் ரீ எம்.பர்ஹான்)
முஸ்லிம்களைப் பற்றி யார் பேசினாலும் முந்திக் கொண்டு குறுக்கீட செய்யும், அஸ்வர் எம்.பிக்கு முஸ்லிம் என்றாலே பிடிக்காது என்றுதான் நினைக்கின்றேன். 

இவ்வாறு சம்மாந்துறைத் தொகுதியின் ஐ.தே.கவின் அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி தனக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று ஞாயற்றுக் கிழமை ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள் அங்கோடைக்குப் போக வேண்டும் என்பதாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் எனக்கு எதிராக விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு ஆளுந் தரப்பில் எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் தயாராக இல்லை. இந்நிலையில் மாற்று இனத்துச் சகோதரர்கள் முஸ்லிம்களைப் பற்றி பேசுகின்ற போது ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் அப்துல் காதர் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசுகின்றவர்களை பேச விடாது குழப்பிக் கொண்டிருக்கையில் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசாது இருக்கின்றார்கள். இதன் காரணமாகவே இவர்கள் பொது பல சேனவில் இணைந்து கொள்ளப் போகின்றார்களோ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தேன். இது எனது சந்தேகம் மட்டுமன்றி நாட்டில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களினதும் சந்தேகமாகவே இருக்கின்றது. 

இதனைத் தெரிவித்தற்காக என்னை அங்கோடைக்கு அனுப்ப வேண்டுமென்று அஸ்வர் எம்.பி கூறி இருப்பதனை வன்மையாக கண்டிக்கின்றேன். ஒரு அரசியல்வாதி அங்கோடைக்கு போக வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியது பொது மக்களாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த போது, அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் அதிகமாக பேசி, அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்திய பெருமை அஸ்வர் எம்.பிக்குத்தான் இருக்கின்றது.

இஸ்லாத்தில் நபிகள் (ஸல்) நாயகமாக இருந்தாலும், அவரை இறைவனுக்கு ஒப்பாக கருத முடியாது. அப்படி கருதுவது பெரும்பாவமாகும். ஆனால், பாராளுமன்றத்தில் ஒரு மனிதரை கடவுளைப் போன்றவர் என்று வர்ணித்த பெருமையும் இவரையே சாரும்.

நாங்கள் முஸ்லிம்களுக்காக பேசுகின்றோம். அஸ்வர் எம்.பி தமது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார் என்பதனை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள்.

முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, இவர் அடிக்கடி குறுக்கீடு செய்ததாகவும், எரிச்சலடைந்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர் ஒருவர் சற்று பேசாது இருக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார்.

முஸ்லிம்களைப் பற்றி யார் பேசினாலும் முந்திக் கொண்டு குறுக்கீட செய்யும், அஸ்வர் எம்.பிக்கு முஸ்லிம் என்றாலே பிடிக்காது என்றுதான் நினைக்கின்றேன். இப்படியாக செயற்படுன்றவர்தான் அங்கோடைக்குப் போக வேண்டுமென்று எந்த சுயபுத்தியுள்ள மனிதரும் கூறுவர்.

சம்மாந்துறை மண்ணின் மகிமையைப் பற்றி அஸ்வர் எம்.பி கூறி இருப்பதனையிட்டு நான் பெருமைப்படுன்றேன். சம்மாந்துறை மண் சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் வாசைன கொண்டது. இந்த மண்ணில் அஸ்ரப்பும் பிறந்தார். 

ஐ.தே.கவின் மூலமாக எம்.பி என்ற முகவரியைப் பெற்றுக் கொண்ட அஸ்வர் எம்.பி அந்தக் கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, இன்று அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார். நாளை பதவிக்காக எந்தக் கட்சிக்கு மாறுவார் என்ற உத்தரவாதம் இல்லை. மேலும், அஸ்வர் எம்.பி இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த வரலாறு கிடையாது. முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கின்றவர்களை எதிர்த்து நின்ற வரலாரே இருக்கின்றது
»»  read more

4/17/2013

பொது பல சேனா அமைக்கவுள்ள முஸ்லிம் பிரிவில் அஸ்வர், காதர் இணைய முயற்சி? ஹசன் அலி சந்தேகம்


முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி தங்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தைரியமில்லை என்றால் நமக்காகப் பேசுகின்ற சகோதர இனத் தலைவர்களின் உரைகளையாவது குறுக்கீடு செய்யாமல் மௌனமாக இருக்க வேண்டியவர்கள், அவர்களை பேச விடாது குழுப்பத்தை ஏற்படுத்துவது நாகரிகமான செயலல்ல என்று ஐ.தே.க.வின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்றைய அரசாங்கத்தில் பல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி கதைப்பதற்கு எவருமில்லை.
முஸ்லிம்களின் பிரச்சினைகளில் பொறுமையாக இருக்குமாறு அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆலோசனைகளை சொல்லுகின்றார்கள்.
ஆனால், அவர்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களைப் பற்றி பேசாது மௌனமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும் போது தலைவர்கள் அரசாங்கத்துடனும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுதல் வேண்டும். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாது இருக்க முடியாது.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் சகோதர இனத்து மக்களின் பிரதிநிதிகள் கதைக்கும் போது, அவர்களுக்கு ஆளுந் தரப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பது அவர்களின் நிலைப்பாடு பற்றி முஸ்லிம்களிலிடையே பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய போது அவருக்கு இடையூறுகளை எற்படுத்தினார்கள்.
அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிய போது மேற்படி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இடையூறுகளை எற்படுத்தி இருந்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
முஸ்லிம்களைப் பற்றி தங்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தைரியமில்லை. இந்த சோம்பறித்தனத்தில் ஆளுந் தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருக்கின்ற போது, சகோதர இனத்து தலைவர்கள் பேசுகின்ற போது மௌனமாக இருக்க வேண்டியவர்கள், அவர்களை பேசவிடாது குழுப்பத்தை ஏற்படுத்துவது நாகரிகமான செயலல்ல.
பொது பல சேன தமது அமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றினை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த முஸ்லிம் பிரிவில் இணைந்து செயற்படுவதற்கு முஸ்லிம்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பொது பல சேன தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசுகின்றவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி பொது பல சேனவினால் உருவாக்கப்பட இருக்கின்ற முஸ்லிம்  பிரிவில் அங்கத்துவம் வகிப்பதற்கு ஆளுந்தரப்பில் உள்ள மேற்படி இரு  எம்.பிக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இவர்களுக்கும் அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமூகத்தைப் பற்றி அக்கரை இல்லை. தங்களின் சுய இலாபத்திற்காகவே அரசாங்கத்தில் இணைந்துள்ளார்கள்.
இவர்களின் இத்தகைய செயல்களைப் பற்றி முஸ்லிம்கள் கேள்விகளை கேட்க வேண்டும். கேள்விகள் கேட்காது இருப்பதனால், நாம் என்ன செய்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஒரு பொதுக் கூட்டம் போட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடுமென்று எண்ணியுள்ளார்கள். இவர்களின் இந்த சிந்தனைகள் தப்பானது என்று காட்டுவதற்கும் எங்களை இனி ஏமாற்ற முடியாதென்று சொல்லுவதற்கும் ஆளுந்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்விகளை கேட்க வேண்டும்.
»»  read more

4/04/2013

அமைச்சரவையை உடன் கூட்டுமாறு கோரியது ஹக்கீமின் கபட நாடகம்! - ஐ.தே.கவின் ஹசனலி விசனம்

(எம் ரீ எம்.பர்ஹான்)
அமைச்சரவையை உடன் கூட்டுமாறு அரசிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தது கபட நாடகமாகும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின்  புனித தலமான பள்ளிவாசல்கள் தொடர்ச்சியாகத்   தாக்கப்பட்டபோது வாய்மூடி மௌனியாக இருந்த ஹக்கீம்  ஆடைக்களஞ்சியம் தாக்கப்பட்டபோது திடீரென விழித்தெழுந்து  ஓலமிடுவது நாடகமில்லையா?  என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி  மேலும் தெரிவித்தவை வருமாறு:-
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களின்  அராஜகங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

பள்ளிவாசல்களில் ஆரம்பித்த அராஜகம்  ஹலால், உணவு,  உடை வியாபார ஸ்தலம் என்று தொடர்கின்றது.

இதனை இந்த அரசில் எதுவும் செய்யமுடியாது என்பது மு.கா. தலைவர் ஹக்கீம்  உட்பட அரசுக்கு வால்பிடிக்கும் அனைவருக்கும்  தெரிந்த விடயம். ஆனால், இவர்கள் பதவி, சுகபோகங்களுக்காக முஸ்லிகளுக்கு துரோகங்களைச் செய்துகொண்டு அரசின் பின்னால்  நிற்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் இன்று அரசியல்  தலைமை இல்லாமல் தவிர்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையான அரசியல் அநாதை என்ற நிலைமை தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வால்பிடிக்கும் நேரத்தில்தான முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, முஸ்லிம் புத்திஜீவிகளும்  உலமாக்களும் இது தொடர்பாக
கரிசனை கொள்ள வேண்டிய காலம், தேவை தோன்றியுள்ளது.

இன்னமும் தாமதித்தால்  எமது  எதிர்கால முஸ்லிம் சந்ததிக்கு இந்த  நாட்டில்  இடமே இல்லாமல்போய்விடும்" - என்று
சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி தெரிவித்தார்.
»»  read more

2/11/2013

ஆளும் கட்சி முஸ்லிம் பிரதிநிதிகள் மௌனியாகி உள்ளதாக UNP ஹசனலி தெரிவிப்பு

இன்று நாட்டில் ஒரு சில அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயட்படுகின்ற போதிலும் அதற்க்கு எதிராக எந்த வித நடவடிக்கைகளும் மேட்கொள்ளது முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் நாடாளமன்ற உறுப்பினர்கள் மௌனம் சாதிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஹசனலி எமது சம்மாந்துறை வெப் ஐ தொடர்பு கொண்டு கருத்து வெளியிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று நாடாளமன்றம் சென்றவர்கள் அவர்களுக்காக குரல்கொடுக்காதிருப்பது பெரும் அநீதியாகும் என்றும், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தன்னால் ஆதாரத்துடன் நிருபிக்க முடியும் என்று சுட்டிக்காட்டியதயும் அவர் நினைவுபடித்தினார்.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா