இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/04/2013

அமைச்சரவையை உடன் கூட்டுமாறு கோரியது ஹக்கீமின் கபட நாடகம்! - ஐ.தே.கவின் ஹசனலி விசனம்

(எம் ரீ எம்.பர்ஹான்)
அமைச்சரவையை உடன் கூட்டுமாறு அரசிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தது கபட நாடகமாகும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின்  புனித தலமான பள்ளிவாசல்கள் தொடர்ச்சியாகத்   தாக்கப்பட்டபோது வாய்மூடி மௌனியாக இருந்த ஹக்கீம்  ஆடைக்களஞ்சியம் தாக்கப்பட்டபோது திடீரென விழித்தெழுந்து  ஓலமிடுவது நாடகமில்லையா?  என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி  மேலும் தெரிவித்தவை வருமாறு:-
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களின்  அராஜகங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

பள்ளிவாசல்களில் ஆரம்பித்த அராஜகம்  ஹலால், உணவு,  உடை வியாபார ஸ்தலம் என்று தொடர்கின்றது.

இதனை இந்த அரசில் எதுவும் செய்யமுடியாது என்பது மு.கா. தலைவர் ஹக்கீம்  உட்பட அரசுக்கு வால்பிடிக்கும் அனைவருக்கும்  தெரிந்த விடயம். ஆனால், இவர்கள் பதவி, சுகபோகங்களுக்காக முஸ்லிகளுக்கு துரோகங்களைச் செய்துகொண்டு அரசின் பின்னால்  நிற்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் இன்று அரசியல்  தலைமை இல்லாமல் தவிர்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையான அரசியல் அநாதை என்ற நிலைமை தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வால்பிடிக்கும் நேரத்தில்தான முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, முஸ்லிம் புத்திஜீவிகளும்  உலமாக்களும் இது தொடர்பாக
கரிசனை கொள்ள வேண்டிய காலம், தேவை தோன்றியுள்ளது.

இன்னமும் தாமதித்தால்  எமது  எதிர்கால முஸ்லிம் சந்ததிக்கு இந்த  நாட்டில்  இடமே இல்லாமல்போய்விடும்" - என்று
சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா