இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/14/2012

3000 பேருக்கு அதிபர் நியமனம்


(ஹனீபா)


இலங்கை அதிபார் சேவை தரம்  2il மற்றும் தரம் 3 ஆகிய பதவிகளுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் மே மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய நியமனம் அடுத்த வாரம் வழங்கப்படவூள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தெரிவித்தார்

இதன்கீழ் 3000 ஆசிரியர்கள் அடுத்தவாரம் அதிபர்களாக நியமனம் பெறவுள்ளனர்

இந்நியமனம் தாமதிக்கப்பட்டு வருவது தொடர்பாக நேற்று கல்வி அமைச்சுக்கும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவர் வீ.ரி.சகாதேவராஜா ஆகியோருக்குமிடையிலான கலந்துரையாடலின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதங்களில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவாகியுள்ள தரம் 2 ல் 2000ம் பேரும் தரம் 3ல் 1000ம் பேருக்குமான நியமனக் கடிதங்கள் அனைத்தும் தயாராகி விட்டதாகவும் இந்நியமனங்கள் அனைத்தும் எதிர் வரும் வாரத்தில் கொழும்பில் விழாவொன்றின் மூலம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்

இதே வேளை அதிபார் சேவை தரம் 3 நேர்முகப் பரீட்சைக்கு தோற்றத் தவரியோருக்கு எதிர்வரும் 17ம் திகதி திங்கட் கிழமை இறுதி நேர் முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ள முடியுமெனவும் தலைவர் சகாதேவராஜா தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா