மூவின சமூகங்களுக்குமான நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்காக ஐ.ம.சு.மு. போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியுள்ள அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது உள்ளார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்திற்கு வருவதற்கும், இதன் மூலம் நான் மீண்டும் இம்மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டு மூவின சமூகங்களுக்கும் எனது பணியினை தொடர்ந்து செல்வதற்கும், பல்லின சமூகங்களுக்கிடையிலான நிலையான சமாதானத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்குமாக மீண்டும் சந்தர்ப்பம் வழங்கிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது உள்ளார்ந்த நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை உறுப்பிரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், எம்.எல்.ஏ. அமீர் ஆகியோர் கலந்து கொண்டு அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலில் நேற்று நடைபெற்ற துஆ பிரார்த்தனை வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கடந்த காலங்களில் என்னோடு நீங்கள் இணைந்து மேற்கொண்ட அரசியல் பயணத்தில் நாம் பல வெற்றிகளைச் சந்தித்தோம். அதன் பயனாக உங்களுக்கும், நமது பிரதேசத்திற்கும், முழு மாகாணதிற்கும் எவ்வித பாராபட்சமுமின்றி முடியுமானவற்றைச் செய்து எமது மக்களின் தாகத்தில் சிறிதளவையேனும் தனித்திருக்கின்றேன். எனது மக்களின் மிகுதி தேவைக்காக இறைவனை வேண்டி நின்றேன்.
எமது தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் வகுத்த வியூகத்தினால் எம்மையெல்லாம் மீண்டும் அதிகார ஆசனத்தில் அமரும் சந்தர்ப்பத்தை நீங்கள் தந்துள்ளீர்கள்.
எமது தலைவரின் நோக்கு தூர திருடியானது. அது சகோதர கிராமங்களை இணைக்க வல்லது. இதன் அடிப்படையில் நாம் எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளதனையும் எமது அரசியல் சாணக்கியத்தையும் மற்றவர்கள் அதிசயத்துடன் நோக்குகின்றனர்.
இதேவேளை நடைபெற்று முடிந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு போதுமில்லாத இனவாதம் மற்றும் பிரதேச வாத அரசியல் பிரச்சாரங்கள் விதைக்கப் பட்டதனை இந்நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் நமது அவாவினையும், நமது கனவுகளையும். இறைவன் பொருந்திக் கொண்டதோடு எமது மக்களும் கொள்கை தவறாது மிக தெளிவாக சிந்தித்து எம்மை தெரிவு செய்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் நான் தனித்திருந்து போராடினேன். ஆனால் இன்று என்னுடன் போராட உங்களில் அதிகமானோர் இணைந்து கொண்டமை எனது பாக்கியமே. நாளைய பொழுதுகள் நமக்காக அமையுமென்ற நம்பிக்கையுடன் இணைந்து பரஸ்பர புரிந்துனர்வுடனனும், சமாதானத்துடனும் செயற்படுவோம். எனது வெற்றிக்கு உழைத்த எனத மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவிப்பதில் நிம்மதியடைகின்றேன் என தெரிவித்தார்.






0 comments:
Post a Comment