TM
இன்று நடைபெற்ற 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் சுமார் 50 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவா மாகாணத்தில் 43 முதல் 46 சதவீத வாக்களிப்பே இடம்பெற்றுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டது. அம்பாறை, மட்டக்களப்பில் 52.55 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தேர்தலை முன்னிட்டு இடம்பெற்ற 117 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக குறித்த மேற்படி விசாரணைப் பிரிவு, அநுராதபுரத்தில் - 17, பொலன்னறுவையில் - 16, திருகோணமலையில் - 12, மட்டக்களப்பில் - 14, அம்பாறையில் - 19, கேகாலையில் 13 மற்றும் இரத்தினபுரியில் - 26 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறியது.
இதேவேளை, இன்றைய தேர்தலானது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலாக அமையவில்லை என்று தெரிவித்துள்ள கபே அமைப்பு, மூன்று மாவட்டங்களிலும் சுமார் 45 சதவீத வாக்களிப்பே இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 121 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்றில் பாரியளவிலான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment