மூன்று மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 100 க்கும் மேறபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோத பிரச்சாரம் குறித்த முறைப்பாடுகளே அதிகம் என தேர்தல்கள் செயலக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அச்சுறுத்தியமை, வாக்காளர்களை திசை திருப்பும் வகையில் செயற்பட்டமை குறித்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
.......................................................................
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை கணியவெலி சிங்கள மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வன்முறை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கிடையிலேயே குறித்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மு.கா. வேட்பாளரான அன்வரின் ஆதரவாளர்களும் ஐ.ம.சு.மு. வேட்பாளரான ஆதம்பாவா நவ்பி ஆகியோரின் ஆதரவாளர்களே வாக்களிப்பு நிலையத்துக்கு முன்பாக குண்டான்தடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சட்டவிரோதமான முறையில் வாக்களிக்க முயன்ற சிலரை கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

............................................................................................................
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளரொருவர் தெஹியத்த கண்டிய பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நபர் இன்று நண்பகல் வேளையிலேயே இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான புத்திஜீவிகள் ஒன்றியத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
..........................................
காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலய வாக்குசாவடிக்கு முன்னால் இன்று காலை இடம்பெற்ற வன்முறை சம்பவமொன்றில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூராசபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் எம்.மிஹ்லார் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையின் சிகிச்சைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் நடத்தியவர் காத்தான்குடி நகரசபை உறுப்பினரான சியாத் என தெரியவருவதோடு சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
..........................................................................................................................
தேர்தல் சட்டங்களை மீறிய இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா மற்றும் ஹொரவபொத்ததான ஆகிய பகுதிகளில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி வாக்கினை அளிக்க முயற்சித்த ஒருவர் கிண்ணியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவர் ஹொரவபொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 comments:
Post a Comment