இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/16/2012

கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தயா கமகே மீண்டும் நியமனம்!


கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் அனைவரிலும் அதி கூடிய விருப்பு வாக்குகளை (41067) இவர் பெற்றிருந்தார் என்பதுடன் கிழக்கு மாகாணத்திலும் ஒட்டு மொத்தமாக இவரது விருப்பு வாக்குகளே முதலிடம் பெற்றுள்ளது.
கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையிலும் இவரே எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக டொக்டர் துசித்த விஜேமான்னவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வட மத்திய மாகாண சபை எதிர்கட்சித் தலைவராக கிங்ஸ் நெல்ஸனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா