இலங்கை அரசியல் வரலாற்றில் தடம்பதித்து சென்ற அஸ்ரப்பின் இடம் இன்றும் வெறுமையாக உள்ளதை உணரமுடிகிறது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய ஐக்கிய ஸ்பாதருமான எம் எச் எம் அஸ்ரப் இன்னும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மத்தியில் தலைவர் என்ற பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு தம்மை அவர்கள் மத்தியில் இருத்திவிட்டு சென்றுள்ளார்
அஸ்ரப் இறக்காமத்துக்கு செல்வற்காக கொழும்பில் இருந்து பயணித்த இலங்கையின் வான்படையின் எம் ஐ 17 ரக உலங்குவானூர்தி அரநாயக்க பைபில் ரொக் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியது இதன்போது அஸ்ரப் உட்பட்ட 14 பேர் பலியாகினர்

1948 ஆம் ஆண்டு பிறந்த எம் எச் எம் அஸ்ரப், அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தீவிரப்பங்காளியாக செயற்பட்டார்
இந்தநிலையில் முஸ்லிம்களுக்கும் அரசியல் உரிமை என்ற ஜனாப் சித்திலெப்பையின் நோக்குக்கு செயலுருவத்தை அஸ்ரப் வழங்கினார் முடிவுகளை மேற்கொள்வதில் எம் எச் எம் அஸ்ரப்பின் சாணக்கியம் அனைவராலும் போற்றப்பட்டது.
இந்த அரசியல் முயற்சியின் ஒரு கட்டமாகவே கிழக்கில் ஒரு முஸ்லிம் மாகாண முதலமைச்சராக வரவேண்டும் என்றும் வடக்கில் தமிழர் ஒருவர் மாகாண முதலமைச்சராக இருக்கவேண்டும் என்றும் அவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இணங்கிக்கொண்டன இதனை, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் அண்மைய கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் வைத்து நினைவூட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment