(ஹனீபா)
அரசாங்கத்தின் 'நீதி உதாண' சட்ட எழுச்சி விளிப்புணர்வு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தின் ஊடாக சம்மாந்துறைப் பிரதேச பட்டதாரிப் பயிலுனர்களுக்கான சட்டவிளிப்புணர்வுச் செயலமர்வு இன்று (15) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் சட்டத்தரணி எம்.ரி.சபீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம வளவாளராக கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன் அவர்களும் வளவாளர்களாக சிரேஷ;ட சட்டத்தரணிகளான யூ.எல்.லியாகத்அலி, எப்.எம்.அமீருல் அன்சார் மௌலான, எம்.சாரீக் காரியப்பர், ஆகியோரும் அதிதிகளாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் வடக்கு கிழக்குப் பிராந்திய ஆணையாளர் சட்டத்தரணி எம்.சீ.அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்தல் லத்தீப், பிரதம நிர்வாக உத்தியோகத்தர் அஸீஸூல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அடிப்படை மனித உரிமைகள்,சிறுவர் உரிமை,முதியோர் உரிமை, பெண்கள் உரிமை வீட்டு வன்முறைகள் தொடர்பான விளக்க உரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.













0 comments:
Post a Comment