இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/19/2012

திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்


-ஹனீபா-
சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திணைக்கள சேவையில் உள்வாங்கும் பாராளுமன்ற சட்டமூலம் நேற்று பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதையிட்டு  அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்சிசி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஜெகத் குமாரவின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று(18) சட்ட மூலத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இத்திட்டத்தை அமுல்படுத்திய  நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் , பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷவுக்கும், பிரதியமைச்சர் லக்ஷ;மன் யாப்பா அபேவர்தனாவுக்கும்  நன்றி தெரிவித்தும் இச்சட்டமூலத்துக்கு எதிர்பு தெரிவிப்பவர்களை கண்டித்தும் இலங்கை பாராளுமன்ற சுற்று வட்டத்திலிருந்து பாராளுமன்ற நுளைவாயில் வரைக்கும் பாரிய ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ மற்றுன்  அமைச்சர்களான பந்துல குணவர்தன, பியசேன கமகே, பவித்திரா வன்னியாராச்சி,லக்ஷ;மன் யாப்பா அபேவர்தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











1 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா