JM
கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த போனஸ் ஆசனங்களில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து துரையப்பா நவரட்ணராஜாவும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து ரி.எம்.ஜெயசேனவும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழர்களின் பிரதிநிதித்துவம் 13 ஆகவும், சிங்களவர்களின் பிரதிநிதித்துவம் 9 ஆகவும் அதிகரித்துள்ளது.
கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டுமானால் அந்தக் கட்சி பெற்றுக் கொண்ட இரண்டு வெகுமதி ஆசனங்களில் ஒன்றை தமக்குத் தரவேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரஸ் கோரியிருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகிய நிலையிலேயே தமிழர் ஒருவரும், சிங்களவர் ஒருவரும் போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment