இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/22/2012

விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான கூட்டத்தை பல்கலை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

2012 க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பமாகும்  என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளபோதிலும், விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்காக செப்டெம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்படுவோருக்கான இக்கூட்டத்தை பகிஷ்கரிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளன அங்கத்தவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அச்சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை முன்னெப்போதுமில்லாத வகையில் தாமதமடைந்துள்ளது. உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை கடந்த முதலாம் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கல்வியாளர்களில் சுமார் 100 பேர் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாகவும் மேலும் பலர் அவர்களை பின்தொடரப் போவதாகவும் கூறப்படுவதில் உண்மையில்லை என கலாநிதி தேவசிறி கூறினார்.

"இந்த எண்ணிக்கைகள் திரிபுபடுத்தப்பட்டவையும் உண்மையற்றவையுமாகும். எமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு இத்தகைய இடையூறு எதுவும் ஏற்படவில்லை. அனைத்து கல்வியாளர்களினதும் பங்குபற்றல் பலத்துடன் இந்நடவடிக்கை தொடரும்" என அவர் கூறினார்.
(TM News)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா