இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/16/2012

கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சர் என்பது உறுதி – அமைச்சர் ரவூப் ஹக்கீம்



மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் இழப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு ஈடுசெய்யமுடியாதது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று கொழும்பு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் 12வது மறைந்த தின வைபவத்தில் கலந்து கொண்டு ஊரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மறைந்த தலைவரின் மறைவுக்குப்பின் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி எத்தனையோ சதிகளையும் வழக்குளையும் சந்தித்திருந்தும் இன்னும் குழையாது நிலையாகவே இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இருக்கின்றது.
தாங்கள் சமகால அரசியல் நிலைமையை அறிய ஆவலாய் இருப்பீர்கள். ஓன்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்பது உறுதியாகிவிட்டது. நாங்கள் அரசுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்தையில் ஈடுபட்டோம்.
இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்தையில் ஈடுபட்ட வேளை நாங்கள் மூவின மக்களுக்கும் பொருத்தமான ஆட்சி கிழக்கில் அமைவதை வலியுறுத்திக் கூறினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து  ஆட்சியை அமைக்க உதவுமாறு எங்களை கேட்டுக்கொண்டனர்.
ஆனால் நாங்கள் அரசுக்கு அதரவு அளிப்பதா ? இல்லையா ? என்பதை திட்டவட்டமாகக் கூறவில்லை.
ஆரசாங்கத் தரப்பும் பேசி இருக்கிறது – தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேசி இருக்கிறது. ஆனால் நாங்கள் இன்னும் ஒரு சில தினங்களுக்குள்  எங்களுடைய முடிவை அறிவிப்போம் .
எப்படி இருப்பினும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில் கிழக்கு மாகாண சபையில் 15 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர் இதை தீர்மானிக்கும் தார்மீக உரிமை முஸ்லிம்களுக்கு உள்ளது. நீங்கள் இதை ஏன் இழுத்தடித்துகொண்டிருக்கின்றீகள் என ஊடகங்கள் எங்களை கேட்கின்றது? ஆனால் தாமதிப்பது நாங்கள் அல்ல.
ஆட்சியை அமைப்பதற்கு காத்திருக்கும் அரசாங்கமும், தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என கூறிக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்தான் காரணம், நாங்கள் காரணம் அல்ல. ஆதரவு அளிப்பதுதான் நாங்கள் அரசாங்கம் ஆட்சியை அமைக்கின்ற போது சமூக நலனை முன்னிலைப்படுத்தி ஆட்சியை அமைப்போம்.
தேர்தல் காலங்களில் வெற்றிலைச் சின்னத்தை அவமதித்து பேசியதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான வாதமாகும். தேர்தல் காலங்களில் நாங்கள் யாருடனும் ஆட்சி அமைப்பது என்று சொல்லவுமில்லை, தூர சிந்தனையுடன்தான் எங்களது மேடைப் பேச்சுகள் இருந்தது என்றும் கூறினார்.
இறுதியில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வெற்றிபெற்ற 7ஏழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 7நிமிடங்கள் உரையாற்றினார்கள்.
கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் போதிய நேரமின்மை காரணமாக தனது உரையை ஆற்றாமல் தவிர்த்துக்கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபிற்கு துஆ பிராத்தனை செய்ததுடன் ஸலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா