இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/16/2012

இஸ்லாத்தை நிந்திக்கும் திரைப்படம்-அமிர் TA கண்டனம்


-ஹனீபா-
இஸ்லாத்தையும் எமது கண்மணி தலைவர் முஹம்மது (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களையும் அவமதிக்கின்ற வகையில் வெளியாகியுள்ள திரைப்படமானது உலகிலே வாழுகின்ற முஸ்லீம்களின் உணர்வுகளை கொதிப்படையச் செய்துள்ளது, இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான முறையில் மற்றைய சமுகத்தின் உணர்வுகளை மதிக்க முடியாத ஈனச் செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயற்பாடாகும் என்பதுடன் அதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எல்.ஏ.அமிர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஒப்பு நோக்கின்ற போது சன்மார்க்க இஸ்லாத்தின்பால் அந்நிய மக்கள் கொண்டுள்ள அன்பும், அவர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலைமையினை தாங்கிக் கொள்ளாத பிற்போக்கு வாத மேற்குலக நாடுகளின் காழ்புணர்ச்சி காரணமாக விசமிகளால் உலக முஸ்லீம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் எமது தூதர் கண்மணி முஹம்மது (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களை இம்சைப்படுத்தி இஸ்லாத்தை கொச்சைப்படுத்த ஏடுக்கும் கொடுமைத்தனத்தை இலங்கை  முஸ்லீம்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கவேண்டும்.
நமது இஸ்லாமிய சமுகத்தின் மீது மேற்கொள்ளப்படும் உச்சக்கட்ட வரம்பு மீறலாகும் அமெரிக்கர்களும் எமது இஸ்லாத்தின் ஜென்ம விரோதிகளுமான இஸ்ரேலியர்களும் இணைந்து தூதர் கண்மணி முஹம்மது (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களை நிந்தித்து தாயரித்துள்ள  ‘முஸ்லீம்களின் அப்பாவித்தனம்’ எனும் திரைப்படம் மூலம் உலகளாவிய முஸ்லீம் சமூகத்தை இன்று கொதித்தெழச் செய்துள்ளது. இது தவிர்கக முடியாததாகும் இதனை நாம் அனைவரும் எதிர்த்தாக வேண்டும் எனவும் அமீர் கேட்டுக்கொண்டார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா