இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/13/2012

முதலமைச்சர் பதவி நிசாம் கரியாப்பருக்கு கிடைக்குமா?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ள அரசு, இதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கியமான பொறுப்புகளை முஸ்லிம் காங்கிரஸிடம் வழங்குவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசும் முஸ்லிம் காங்கிரஸும் இது விடயமாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இத் தருணத்தில். முஸ்லிம் காங்கிரஸ் மேலும் கோரிக்கையாக வோனஸ் ஆசனத்தில் ஒன்றை வழங்க வேண்டுமெனவும் அரசிடம் கேட்டுள்ளது.
இந்த ஆசனம் வழங்ப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி மேயரும் சிரஸ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பருக்கு வழங்கி கிழக்கின் முதலமைச்சர் நிஸாம் காரியப்பருக்கு வழங்க வேண்டுமெனவும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களும் தலைவருக்கு ஆலோசனையை வழங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா