இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/13/2012

கிழக்கின் முதலமைச்சராக ஹாபீஸ் நசீரை அரசிடம் SLMC சிபாரிசு செய்துள்ளது


kkyinfo
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஹாபீஸ் நசீரை சிபாரிசு செய்துள்ளதாக நம்பகமாக தெரியவருகின்றது.
இன்று (13.9.2012) பிற்பகல் அரசாங்க பிரதி நிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீமுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் முதலமைச்சருக்காக ஹாபீஸ் நசீரின் பெயரை சிபாரிசு செய்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அரசாங்க பிரதி நிதிகளிடம் றஊப் ஹக்கீம் முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரசுக்கு தரவேண்டும் எனவும் அத்தோடு ஒரு மாகாண அமைச்சையும் முஸ்லிம் காங்கிரசுக்கு தரவேண்டும் எனவும் கோரியதாக நம்பகமாக தெரியவருகின்றது.
நசீர் ஹாபீசுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பில் தனது ஆசீர்வாதம் நசீர் ஹாபிசுக்குள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் நசீர் ஹாபிசிடம் இன்று தெரிவித்ததாக முஸ்லிம் காங்கிரசின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தெரியவருகின்றது.
தவிசாளர் பசீர் சேகுதாவூதின் இல்லத்தில் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிசாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது ஹாபீஸ் நசீர் அஹமதும் அங்கு சென்றுள்ளார் இதன் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஹாபீஸ் நசீரின் முதலமைச்சர் சிபாரிசை ஆசீர்வதித்ததாக தெரிய வருகின்றது.
இன்னும் இரண்டு தினங்களுக்கிடையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெயரை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இதே வேளை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டுமென அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தேசிய காங்கிரசும் ஒன்றாக இணைந்து அரசாங்க பிரதி நிதிகளிடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விட்டுள்ளன.
அமைச்சர் றிசாத் பதியுத்தீன், அமைச்சர் அதாவுல்லா ஆகிய இருவரும் அமீர் அலியின் பெயரை சிபாரிசு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெயரும் இந்த முதலமைச்சர் பட்டியலில் அடிபடும் அதே வேளை திருகோணமலை மாவட்டத்திலுள்ள நஜீப் ஏ மஜீதின் பெயரும் இந்த முதலமைச்சர் வரிசையில் அடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா