இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/11/2012

மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தல் முறைமைகளிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும்: ரணில் (செய்தித் துளிகள்)


மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தைப் போன்றே மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறைமை வெற்றியளிக்கும்.
நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் - ஜே.வி.பி
மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் மக்களின் விருப்பு வெறுப்புக்கள் வெளிப்பட வேண்டும் என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு முறைமை தொடர்பில் நாட்டில் பாரியளவில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
எனினும், விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கும் போர்வையில் மக்களின் அபிலாஷைகளுக்கு புறம்பாக செயற்படுவதனை அனுமதிக்க முடியாது. தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் மக்களின் விருப்ப வெறுப்புக்கள் வெளிப்பட்டுள்ளனவா என்பதனை கவனிக்க வேண்டும்.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவோ அல்லது வேறும் தரப்பினரின் அதிகாரத்தை தட்டிப் பறிப்பதற்கும் இந்த தேர்தல் திருத்தச் சட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா