ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நடுவர்களே பணியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இந்த பணி இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடுவர்களுக்கு எதிரான விசாரணைகள் முடிவடையும் வரையில், குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் நடுவர்களாக பங்கேற்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டி மற்றும் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடர்களின் போது இந்த மூன்று நடுவர்களும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காமினி திசாநாயக்க, சாகர கால்லகே மற்றும் பிரான்ஸிஸ் ஆகிய நடுவர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்னளர்.
2ம் இணைப்பு
ஆறு நடுவர்கள் பணி இடைநிறுத்தம்!
கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை மாற்றி அமைக்க பேரம் பேசிய ஆறு நடுவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முடியும் வரை அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
பணத்தை பெற்றுக்கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமான தீர்ப்புகளை வழங்க முடியும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கவுரி, அனீஸ் சித்திக், வங்காளதேசத்தை சேர்ந்த நதிர் ஷா, இலங்கையை சேர்ந்த காமினி திசநாயக்கே, மவுரிஸ் வின்ஸ்டன், சகாரா காலேஜே ஆகிய நடுவர்கள் இந்தியா டி.வி. சனல் நடத்திய இரகசிய பேரத்தில் கூறியிருப்பது அம்பலமாகியுள்ளது.
எல்.பி.டபிள்யூ. மற்றும் ரன்-அவுட் விவகாரத்தில் சாதகமான தீர்ப்பை அளிக்க முடியும். குறிப்பாக பந்து பேட்டின் உள்பகுதியில் உரசியபடி பேடில் படும் பந்துக்கு எல்.பி.டபிள்யூ வழங்க முடியும், அணியில் இடம்பெறும் வீரர்கள் மற்றும் பிட்ச்சின் தன்மை குறித்த அறிக்கை ஆகியவற்றை 35 நிமிடங்களுக்கு முன்பாகவே தர முடியும். இப்படி பல்வேறு விஷயங்களை பணம் தந்தால் செய்ய முடியும் என்று மேற்கண்ட நடுவர்கள் டி.வி. நிறுவனம் நடத்திய இரகசிய வீடியோ பதிவில் கொட்டியுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த டி.வி. சனலிடம் ஆதாரங்களை தந்து உதவுமாறு கேட்டுள்ளோம். 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிந்தவர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேச கிரிக்கெட் வாரியங்களும் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளன. அதே சமயம் புகாரில் சிக்கிய நடுவர்கள் வழக்கம் போல் தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளனர்.






0 comments:
Post a Comment