இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/19/2012

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடை பவனியும் மேடை நிகழ்வும்

TM


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் - சம்மாந்துறையில் இன்று வியாழக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. கிறீன் ப்ளவர்ஸ் விழிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு இரு அம்சங்களைக் கொண்டதாக இருந்தது.

'பார்வையற்றவர்களின் மறுமலர்ச்சிப் பயணத்தில் நாமும் இணைந்து கொள்வோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல் அம்சமாக விழிப்புலனற்றவர்களின் நடைபவனி இடம்பெற்றது. சம்மாந்துறை நகர மண்டபத்திலிருந்து – சம்மாந்துறை சந்தை சுற்று வட்டத்தினூடாகச் சென்ற இந்த நடை பவனியானது மீண்டும் நகர மண்டபத்தினை வந்தடைந்தது.

நிகழ்வின் மற்றொரு அம்சமாக மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் மற்றும் விழிப்புலனற்றோர் மீதான ஏனையவர்களின் அக்கறைகள் குறித்து அதிதிகள் உரை நிகழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து விழிப்புலனற்றோரின் கலை, கலாசசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன்போது, தங்கள் கல்வி நடவடிக்கைகளில் திறமைகளை வெளிப்படுத்திய விழிப்புலனற்றவர்கள் மூவருக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் விழிப்புலனற்றோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா