கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்தை ஆதரிக்குமாறு தாம் அதன் எந்த உறுப்பினருக்கும் நியூயோர்கில் இருந்து குறுந்தகவல் எதனையும் அனுப்பவில்லை என்றும், அந்த தகவல் பொய்யானது என்றும் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், முதலமைச்சர் விவகாரத்தில் பிந்திய இரண்டரை வருடங்களை கட்சிக்கு வழங்குவது என்ற உத்தரவாதத்துடன் சேதமில்லாத விட்டுக்கொடுப்பை செய்திருப்பதாகவும், கிழக்கில் திவிநெகும வாக்கெடுப்பில் கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து தாம் நேர்மையான கோபத்தை அவர்களிடம் வெளிப்படுத்த நேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்;டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
திவிநெகும வாக்களிப்புத் தொடர்பில் நானும், செயலாளர் நாயகமும், தவிசாளரும் அதில் பங்குபற்றிய எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அதற்கான காரணங்களை அவர்கள் தெரிவித்தனர். ஒருவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஒரு கதையை கூட சொன்னார். அதுவும் சிங்கமொன்றின் கதை. நான் உங்களுக்கு தேர்தல் காலத்தில் கூறிய கிழட்டுச் சிங்கத்தின் கதையல்ல.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், தமிழர் ஊடகத்தினரும அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் என்னை விமர்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எதனையும் கூற விரும்பவில்லை.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை மூக்கணாங் கயிறு மாட்டி தாம் விரும்பும் திசையில் இழுத்துச்செல்ல எவருக்கும் இடமளிக்க முடியாது என்றார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment